Author Topic: சிந்தனைச் சிதறல்கள் 3  (Read 419 times)

Offline thamilan

சிந்தனைச் சிதறல்கள் 3
« on: March 11, 2017, 06:16:31 PM »
நான் உன் மனதில்
சிறை இருப்பது போதாதென்று
உன் மனதிலும் ஏனடி
சிறை வைத்திருக்கிறாய்?? ..........
பிரா

நீ என்னை மிதித்தாலும்
உன் காலடியில் கீழ்
கிடப்பதையே சொர்க்கமாக நினைக்கிறேன் ..........
செருப்பு

இறைவன் வரைந்த
ஓவியாமான உன்னை
தினமும் வரைந்திடும்
நானும் ஒரு பிக்காஸோவே.......
மேக்கப் செட்

உன் காதலுக்கு கிடைக்காத
பாக்கியம்  எனக்கு கிடைக்கிறது
தினமும் பலதடவை உன்
உதட்டை முத்தமிடும் நான்............. 
கைக்குட்டை

உன் இதயத்தில் 
யார் இருந்தாலும்
உன் கண்களுக்குள் நான் இருக்கிறேன்....... 
கண்மை

நீ சிரிக்கையில்
நானும் குலுங்கி குலுங்கி சிரிக்கிறேன்
நீ துன்பமாய் இருக்கையில்
நானும் நொருங்கிப் போகிறேன்...........   
கண்ணாடி வளையல்கள்

நான் ஆயுள் கைதியாகிறேன்
உன் ஆடைக்குள் எனை
சிறைவைப்பாய் எனில் ..........
உள்ளாடைகள் 
« Last Edit: March 11, 2017, 06:18:54 PM by thamilan »