நினைக்கும் நேரத்தில்
நினைவுகளை போல்
நெஞ்சோடு அள்ளிக்கொள்ள
நீயில்லை,..
கனக்கும் மனதின்
கண்ணீரை கண்டு
கைத்துடைக்க
நீயில்லை..
துடிக்கும் நெஞ்சத்தின்
துயரம் கண்டு என்னை
துயில வைக்க
நீயில்லை,..
ஆர்ப்பரிக்கும் அன்பை
அளவோடு பகிர்ந்துகொண்டு
அளவில்லா இன்பம் காண
நீயில்லை..
சிதறிடும் சிரிப்பொலியை
சிம்பனியாய் செய்திருக்க
நீயில்லை..
பதித்திடும் பாதங்களையெல்லாம்
பல்லவன் போல் சிற்பித்திருக்க
நீயில்லை..
வழிந்திடும் வியர்வைகளை
உருகிடும் பனித்துளியாய்
பார்த்திருக்க
நீயில்லை..
உதிர்ந்திடும் மலர்களில்
ஒன்றை எடுத்து
நாட்குறிப்பின் நடுவில்வைத்து
நாளெல்லாம் ரசித்திருக்க
நீயில்லை..
நழுவிடும் ஆடைகளையெல்லாம்
தழுவிடும் நிலவாய் எண்ணி
தாங்கி நின்றிட
நீயில்லை..
நீயில்லை நிழலாக..
நிஜம் மட்டும் நினைவாக..
காதல் உண்டு கண்ணோடு..
கண்ணீர் மட்டும் என்னோடு...