Author Topic: ~ கறிவேப்பிலை அடை ~  (Read 328 times)

Offline MysteRy

~ கறிவேப்பிலை அடை ~
« on: March 03, 2017, 08:01:28 PM »
கறிவேப்பிலை அடை



தேவையானவை:

இட்லி அரிசி, கறிவேப்பிலை - தலா ஒரு கப், துவரம்பருப்பு - கால் கப், காய்ந்த மிளகாய் - 8 (அல்லது காரத்துக்கேற்ப), சீரகம் - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

 இட்லி அரிசி, துவரம்பருப்பைக் கழுவி ஊறவைக்கவும். கறிவேப்பிலையை நன்கு அலசவும். அரிசி, பருப்பு, காய்ந்த மிளகாய், சீரகம், உப்பு, பெருங்காயத்தூள் ஆகியவற்றை கிரைண்டரில் சேர்த்து சற்றே கொரகொரப்பாக அரைக்கவும். கறிவேப்பிலையையும் சேர்த்து ஒரு நிமிடம் ஓடவிட்டு மாவை எடுக்கவும்.

தோசைக்கல்லைச் சூடாக்கி மாவை தோசை ஊற்று வது போல் ஊற்றி, நல்லெண்ணெய் விட்டு திருப்பிப் போட்டு எடுக்கவும். இதற்குத் தேங்காய் சட்னி நல்ல காம்பினேஷன்.