Author Topic: ~ அமிர்தப் பொடி சாதம் - உடல் ஆரோக்கியம் மேம்படும்! ~  (Read 399 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226929
  • Total likes: 29030
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
அமிர்தப் பொடி சாதம்



தேவையானவை:

வெள்ளை எள், மிளகு, சுக்குப்பொடி, ஓமம், சீரகம், பெருங்காயத்தூள், தனியா, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - சிறிது, நல்லெண்ணெய் - தேவைக்கு, காய்ந்த மிளகாய் - 5.

தாளிக்க:

 கடுகு, உடைத்த உளுந்து - தலா 1/2 டீஸ்பூன், வேர்க்கடலை - 1 டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை - சிறிது, நார்த்தை இலைகள் - 10 (கழுவி நடுக்காம்பை எடுத்துவிடவும்) வெல்லத்துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், வடித்த சாதம் - தேவையான அளவு.

செய்முறை:

 எள் உள்ளிட்டவற்றைத் தனித்தனியாக வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். மிக்ஸியில் நார்த்தை இலையை ஆய்ந்துப்போட்டு, கொரகொரப்பாக அரைக்க வேண்டும். இதனுடன் வறுத்ததையும் ஒன்றாகப்போட்டு, உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். பிறகு வெல்லம் போட்டு மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றினால் அமிர்தப் பொடி ரெடி.

சாதத்தைப் பொலபொலவென வடித்து, அதில் தேவையான அளவு பொடி சேர்த்துக் கிளறி, நல்லெண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, வேர்க்கடலையைப் போட்டுத் தாளித்து, கிளறி சாப்பிடலாம்.
பலன்கள்: எள் உடலை வலுவாக்கும். கால்சியம் நிறைந்தது. மிளகு, சுக்கு, சீரகம், பெருங்காயம் ஆகியவற்றில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட், நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்தும். இந்தப் பொடியை சாதத்தில் பிசைந்து சாப்பிட, உடல் ஆரோக்கியம் மேம்படும். வாரம் ஒருமுறை சாப்பிடலாம்.