Author Topic: மழையும் என் மனசும்  (Read 2561 times)

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 45
  • Total likes: 45
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
மழையும் என் மனசும்
« on: July 21, 2011, 04:37:53 AM »
சுகமாய் மேகம் சுமந்து
சுற்றித் திரிவதை விட்டு
என்னைச் சுண்டியிழுக்கவே
வந்தாயோ - மழையே!
மண்ணுடன்
பல்லாங்குழி!
என்னுடன்
பெண்மைத் தீண்டலா?
என்ன சொல்லி அனுப்பினான்
வருணன் - மண்ணுடன் காதல்
சொல்லவா - என்னுடன்
தேடல் கொள்ளவா?
வா! என் வீட்டு சன்னல்களில்
சிறையாய்க் கம்பிகள் இல்லை!
உனக்குத் தெரியும் - மழைக்கும்
சிறையிட விரும்பாதவன் நான்!
மழைக்குச் சிறையிட விரும்பாத
என் மனதோடு மாத்திரம் சொல்!
என்னைப்போல் எத்தனைபேருக்கு
ஒவ்வொரு மழையின் போதும்
மழைத்துளிகழுடன் கவிதைகளையும்
கொண்டு வருகிறாய்?

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்

Offline Global Angel

Re: மழையும் என் மனசும்
« Reply #1 on: July 21, 2011, 04:53:42 AM »
nice ;D ;D ;D ;D ;D ;D