காதல் கவிதைகளில்
பொய் இருக்கலாம்
ஆனால் காதலில் பொய்
இருக்கலாமோ ?
காதலில் இணைந்திருக்கவே
எல்லோரும் விரும்புவர்
ஆனால் நீயோ
என்னை பிரிந்திருக்க சொல்கிறாய்
ஓ! பிரிந்திருக்கும் போது நினைவுகள்
அதிகம் என்பதற்காகவா ..?
உன் கன்ன குழி சிரிப்பில்
என்னை இழந்தேன்.முதலில்
இன்று உன்னை கானா நாளில்
தினம் ஏதோ இழக்கிறேன்
நான் படும்
வேதனைகள் சொல்லில் அடங்காது
உன்னோடு இருந்த அந்த
நிமிடமே என் இன்ப நிமிடம்
தொலைவில் நீ இருந்தாலும்
உன் வெப்பம் நான் உணர்கிறேன்
கனவுகளுக்கு காவல்
இருக்கும் காதலனாய் நான்
உன் நினைவுகளை
எப்படி உறங்க வைப்பது?
எல்லாம் இருந்தும் ஏதுமற்ற
வெறுமை எப்பொழுதும்மனதில்
காலம் கடந்து போகும் -ஆனால்
உந்தன் காயம் ?
நம் நேசிப்பின்ஆழம்
அளக்க கருவியில்லை
எதிர்காலம் ஒரு
வினாக்குரியான போது
புதிரல்ல நம் வாழ்க்கையென்று
புது முடிவு எடுக்க உன்னால்
மட்டுமே முடியும்
அவள் சென்ற பாதையில்
பார்த்து நிற்கிறேன்
உன் பாதம் மீண்டும்
காண்பேனோ ?