காதல் கரு 14/02/2011.
உள்ளங்களுக்கொப்ப மாறுபடும்
ஓர் உயிருள்ள கரு காதல்
காதல் என்பது எவரிடத்திலும்
வரையறுக்கப்பட்ட ஒரு
இலக்கணம் இல்லை
அது குடியிருக்கும் உள்ளங்களுக்கு
ஒப்ப மாறுபடும் ஓர் உயிருள்ள கரு.
காதல் என்கின்ற உணர்வினுள்
ஒன்றிப்பவர்கள் அனைவரும்
இல்லறத்தில் இணைந்து விடுவதில்லை
என்பது உண்மையாயினும்
காதல் எப்போதும் இறப்பதில்லை
நினைவுகளாய் ஆயுள் எல்லை வரை
நீளும் அற்புதக் காவியம்
காதலிக்கும் காலங்களில்
உள்ளங்கள் கொள்ளும் அன்பெனும்
ஏக்கங்களும் தவிப்புக்களும்
மாங்கல்ய இணைவுக்கு பின்னரும்
அனைவர் வாழ்விலும் இன்பமாய்.....
தொடரட்டும்.
காதலெனும் உணர்வு
உண்மையென நிலைத்திட
காதலர் உள்ளம் கறைகளை களையட்டும்.....
மனிதருள் காதலும் வாழட்டும், வாழ்த்துக்கள்.....
குறைகள் என்னுடையவை நிறைவுகள் கடவுளால்
நன்றியும் மேன்மையும் கடவுளுக்கே