எப்படி தொடங்குவது
தெரியாமல் தான் நான் நுழைந்தேன்
யாரை அழைப்பது
தெரியாமல் தான் நின்றேன்
உறவுகள் யாருமில்லை -இங்கு
வந்தவுடன் என்னை கொண்டாட
என்ன செய்வது மீண்டும்
சென்று விடலாமா என் தனிமைக்கே
வழிவிட்டு -என்றும் யோசித்தேன்
நுழைந்து தான் பார்ப்போமே
என்று அறைக்குள் வந்தேன்
என்ன ஆச்சரியம் எனக்காக
காத்திருந்தது போல் ஓர் அரவணைப்பு
நீண்ட நாள் பிரிந்த உறவை கண்ட
சந்தோசம் என் மனதில்
பரஸ்பரம் முகமும் பெயரும் தெரியா -என்
சகோதர சகோதரிகளும்-என்
நண்பர்களும் என்னை உறவு முறை
வைத்து கொண்டாடும் அதிசயம்
கண்டேன் இங்கு ..
வாழ்க FTC
வாழ்க என் உள்ளம் கொள்ளை கொண்ட
என் அன்பு சகோதர சகோதர்களே
நண்பர்களே தலை வணங்குகிறேன்
உங்கள் அன்புக்கு ...
----Chumma--------