Author Topic: ஜாலியா டான்ஸ் ஆடுங்க உடம்பு இளைக்கும் !  (Read 1068 times)

Offline RemO

உடற்பயிற்சி உடலுக்கும் மனதிற்கும் இதமானது. உடலை வருத்தி செய்வதை விட ஆனந்தாய் செய்தால் உடற்பயிற்சியும் உற்சாகம் தரக்கூடியதுதான். வீட்டில் வேலை செய்து கொண்டே தம்பதியர் மேற்கொள்ள வேண்டிய ஜாலியான உடற்பயிற்சிகளை தெரிவித்துள்ளனர் நிபுணர்கள்.

நளினமான நடனம்

நடனம் மனதிற்கும் உடலுக்கும் உற்சாகம் தரக்கூடியது. உடலில் தேவையற்ற இடங்களில் உள்ள கொழுப்புகளை கரைத்து கச்சிதமாக வைக்கும். தற்பொழுது பெரும்பாலான பார்ட்டிகளில் நடனம் ஆடப்படுகிறது. தம்பதி சமேதராக பார்ட்டிகளுக்கு செல்லுங்கள். உற்சாகமாக நடனமாடுங்கள். உடற்பயிற்சியும், உற்சாகமும் ஒரே நேரத்தில் கிடைக்கும். உடல் எடையும் குறையும்.

ஜாகிங் போகலாம்


அதிகாலைப் பொழுதில் தம்பதி சமேதராக ஜாகிங் போவது அற்புதமான விசயம். அந்த நேரத்தில் பேசுவதற்கு நிறைய விசயங்கள் கிடைக்கும். எனவே ஜாலியாக பேசியபடியே ஜாகிங் போகலாம். உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு கரைவதோடு, கச்சிதமான உடல் அமைப்பும் பெறலாம்.

சைக்கிள் பயிற்சி


சைக்கிள் ஓட்டுவது மிகச்சிறந்த உடற்பயிற்சி. இது தொள தொள தசைகளை இறுக்கும். அதிக கலோரிகளை எரிக்கும். இருவரும் ஜோடியாக சைக்கிளில் ஒரு பயணம் போங்களேன். உடம்பும், மனசும் உற்சாகமடையும்.

உற்சாக நீச்சல்

நீச்சல் மிகச்சிறந்த உடற்பயிற்சி. தனியாக நீச்சலடிப்பதை விட துணையுடன் தினசரி நீச்சலடிப்பது உற்சாகத்தோடு உடல் பருமனை குறைக்கும். மனதும் ரிலாக்ஸ் ஆகும்.

டென்னிஸ் விளையாடுங்கள்

உடம்பில் உள்ள வியர்வை வெளியேறும் வகையில் டென்னிஸ், பூப்பந்து, இறகுப்பந்து போன்ற ஜோடியாக விளையாடும் விளையாட்டுக்களை விளையாடலாம். இதனால் உற்சாகம் கிடைப்பதோடு உடலும் இளைக்கும். உடற்பயிற்சியோடு தினசரி 8 முதல் 10 டம்ளர் தண்ணீர் இது உடம்பில் நீர்ச்சத்தினை தக்கவைக்கும். தோல் வறட்சியை தடுக்கும். என்ன எங்க கிளம்பிட்டீங்களா? ஜாலியா உடற்பயிற்சி செய்யத்தானே?

Offline Yousuf

செயற்கையான முறையில் உடல் பருமனை குறைக்க மருத்துவத்தை நோக்கி செல்லாமல் இயற்கையான இப்படி பட்ட பயிற்சிகளில் இடுபட்டு உடல் பருமனை குறைப்பது மட்டும் அல்லாமல் ஆரோக்கியமாகவும் வாழலாம்.

நல்ல பதிவு ரெமோ!

Offline RemO