வஞ்சம் இல்லா அன்பும் நட்பும்!
பிடிக்காதவர் வெறுப்பவர் இதயத்தில் வாரி
இறைக்கப்படினும் அன்பும் நட்பும் அற்பமே!
நாயிலும் மேலாய் அன்புகொண்டு
அடிக்க அடிக்க காலையே கோவிலென
சுற்றியே வாழ்ந்திடினும் உணர்ந்திடார்
அன்பிலார்.
அன்பு அவமானம் பொறுக்கும்
ஆசைப்படாது பாசமாய் இருக்கும்!
நட்பு நாசமாய் போயினும் நல்லதே
நினைக்கும் வஞ்சனை செய்யாது!
அன்பிலார் மனதுபோல் அசிங்கம்
உலகிலே இல்லை
நட்பிலார் நெஞ்ம்போல் சுயநலம்
உலகில் இல்லை
நட்பும் அன்பும் காட்டுவோரிடம்
காட்டுதல் சமநிலை
நட்பும் அன்பும் காட்டாதோரிடம்
காட்டுதல் உறவை விரும்பல்
காட்டப்படும் அன்பும் நட்பும்
உணராதோரிடம் காட்டுதல்
நம்பிக்கை
காட்டப்படும் அன்பும் நட்பும்
புரியாததுபோல் நடிப்போரிடம்
காட்டுதல் பரிதாபம்
அன்பும் நட்பும் விலைமதிக்க
முடியாதவை - ஆனால்
பணமோ பொருளோ செலவின்றி
வழங்கக் கூடியவை
உலகில் இன்று அழிந்துபோன
வஞ்சம் இல்லா அன்பும் நட்பும்!
இருப்பதை உணர்ந்தால்
அதுவே வரம்!
குறைகள் என்னுடையவை நிறைவுகள் கடவுளால்
நன்றியும் மேன்மையும் கடவுளுக்கே