கணவனுக்கு ஒருவகை சாபமே!
அப்பா ஆகும் தருணங்கழும்
தாய்மை எனும் புனிதமும்
ஈடு இணை இல்லாதவை
தாய்மைப் பேறடையும் தருணங்களை
அருகே அமர்ந்து அனுபவிக்கும் வலி
கணவனுக்கு கிடைக்க பெற்ற
ஒருவகை சாபமே!
தாங்கிட வலிமையற்ற... (வார்த்தையில்லை)
வார்த்தைகளில் சொல்லிவிட முடியாது
பிரசவ அறையின் வாசலோரம் நிக்கையிலும்
மகவு ஈகையில் மனைவி அலறும் குரல் ஒலி
இதயத்தின் இயக்கம் பறிக்குமே!
மனைவியின் வலியின் ஒலி - அன்பான
கணவன் உயிர் பறிக்கும்
மனைவி மகவு ஈகையில் அவள்படும்
வலிகள் காணும் கணவன்
இன்னோர் பிரசவம் கேளான்!
உணர்ந்திடு உன்னவள் ஈகம்
அன்பாய் பேணு தாய்மை...
சில பெண்களின் உடல் நிலை
தாய்மை எய்திடும் வலிமையற்று
கர்ப்பம் தாங்கையில் பிரசவிக்கையில்
இறப்பதுமுண்டு, உண்டே!
சில வாழ்வு மகப்பேறிலும்
மனைவியே குழந்தையாதல் இன்பம்!
அனைத்துமே இறைவன் ஈவது!!!
குறைகள் என்னுடையவை நிறைவுகள் கடவுளால்
நன்றியும் மேன்மையும் கடவுளுக்கே