Author Topic: கல்லாகிப் போனதந்தப் பூ  (Read 434 times)

Offline thamilan

என் வீட்டுக்கு
எதிர்  வீட்டில்
வந்திறங்கியது ஒரு வானவில்

பிரமன்
தன்னிடம் மிஞ்சி இருந்த
அழகையெல்லாம் ஒன்று திரட்டி
வடித்தெடுத்த ஒரு அழகுத் தேவதை அவள்

அன்னத்தை  விட அழகிய நடை
மின்னலை  விட குறுகிய இடை
ஆலம் விழுதென   நீண்ட சடை
வர்ணங்கள் அனைத்தையும் ஒன்று குழைத்தாற்போல
ஒரு அழகுக்கு குவியல் அவள்

கண்டதும் மனதுக்குள்
தீபாவளித் திருநாள்
மனமெங்கும் மத்தாப்பூ
பட்டாம்பூச்சிகளின் படபடப்பு 
மார்கழி மாதத்தின் கதகதப்பு

எனக்காகப் பிறந்தவளை
என் கண்முன்னே காட்டிவிட்டான்
கடவுள் என
ஆனந்தக் கும்மாளமிட்டது மனது

எடுத்தேன் காகிதத்தை
அடைத்தேன் காதல் உணர்வுகளை
மையாக பேனைக்குள்
வடித்தேன் ஒரு காதல் கடிதம்
கொடுத்தேன் அதை ஒரு பூவுடன்
அவள் தம்பி மூலம்

நாட்கள் நகர்ந்தன
பதிலைக் காணவில்லை
காலாற நடந்த நான்
தடுக்கி விழுந்தேன் - காரணம்
ஒரு பூ......

ஓ பெண்ணே
நான் கொடுத்தப் பூவை- நீ
கசக்கி எறிந்தால்
கல்லாகிப் போனதந்தப் பூ!!!!!

« Last Edit: January 24, 2017, 02:19:13 PM by thamilan »

Offline SweeTie

Re: கல்லாகிப் போனதந்தப் பூ
« Reply #1 on: January 23, 2017, 08:40:25 PM »
அட  எங்க மிச்ச அழகில்  செய்த  அழகுக்குவியலா   அது?   அப்படின்னா  எங்க மொத்த அழகும்   எப்பிடியிருக்கும்  என்று கொஞ்சம் யோசிச்சு  பார்த்திங்களா?....
உங்கள் அழகோவியத்துக்கு   எங்கள் வாழ்த்துக்கள் 
« Last Edit: January 23, 2017, 08:47:52 PM by SweeTie »

Offline LoLiTa

Re: கல்லாகிப் போனதந்தப் பூ
« Reply #2 on: January 31, 2017, 05:46:34 PM »
Sari anna arumai kavidhai