Author Topic: நெஞ்சத்து வலிபோக்க மின்னஞ்சல்  (Read 418 times)

Offline SarithaN

  • Sr. Member
  • *
  • Posts: 468
  • Total likes: 921
  • Total likes: 921
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வலியுணர்ந்த மனிதன் பிறரை துன்புறுத்தான்.....
நெஞ்சத்து வலிபோக்க மின்னஞ்சல்

https://www.change.org/p/prime-minister-of-india-save-jallikattu-ban-peta

இனத்தோடு இணைந்து போராட
வகையின்றி. வலியால் வதங்கி!
மேலைத் தேசமதில் மெலிந்து
நான் நொந்திருந்தேன்!


யாரும் இல்லா ஓர் இரவில்
தனித்து நான் நின்றிருந்தேன்,
தனியே நான் நிற்கையில்     
தவம் ஒன்று செய்திருந்தேன்,


செய்த தவம் வரமாக
எனைநான் மறந்திருந்தேன்

நெஞ்சத்து வலிபோக்க
மின்னஞ்சல் தந்தியிடும்
வெகுமதியில் ஆறுதல்!

சல்லிக்கட்டை முழுங்கி,
யல்லிக் கட்டாகி போன
ஏறுதழுவல் என் குலப்பெருமை!   
     

குறுக்கிடும் கூலிப் பேய்கள்
குலமறியா பேதைகள்!

மாட்டை அடக்கி மனிதன் காயமுறும்
காட்டு மிராண்டி தனத்தை அல்ல
நாங்கள் மீட்க விரும்புவது!

நீங்கள் அக்கறை காட்டுவதுபோல்
அழிக்க நினைக்கும் எம் வீட்டு பிராணிகளை
காக்கும் காவல் போராட்டம்!


தடத்தை பண்பை விவசாயத்தை குலப்பெருமைகள
விளைநிலங்களை காக்கவும் மீட்கவுமே போராட்டம்!
மானம் இழந்து கைகட்டி ஏவல் புரிந்தது போதுமெனும்
அடையாளமே இந்த பறைமுழக்கம்!

தமிழர் மேல் இடப்படும்
ஒடுக்கு முறையில் இருந்து
மீழும் அடையாளமே!

ஏறுதழுவுதலில் கருக்கொண்ட
போராட்ட ஆரம்பம்!



குறைகள் என்னுடையவை  நிறைவுகள் கடவுளால்
நன்றியும் மேன்மையும் கடவுளுக்கே
« Last Edit: January 19, 2017, 06:44:34 AM by SarithaN »
உன்னைப் போலவே...அனைவரையும் நேசி...யேசு                       ...... Thou shalt love thy neighbour as thyself. Jesus.....