Author Topic: மாற்றம்  (Read 997 times)

Offline Anu

மாற்றம்
« on: February 09, 2012, 07:58:09 AM »
கருவறையில் இருக்கையிலே
இருட்டறை தான் என்றாலும்
உணர்ந்தோம் ஒரு பாதுகாப்பை.
வெளிச்சமும் பிடிக்கவில்லை
வெளியுலகம் வருவதற்கோ
துளியளவும் விருப்பமில்லை.
உள்ளேயே இருப்பதற்கா
கருவாய் நீ உருவானாய்
என்றே பரிகசித்தே படைத்தவன்
பாரினில் பிறக்க வைத்தான்.


அழுதே நாம் பிறந்தோம் பாதுகாப்பை
இழந்தே நாம் தவித்தோம்.
பிறந்தது இழப்பல்ல
பெற்றது ஒரு பேருலகம்
என்றே பிறகுணர்ந்தோம்.
சிரிக்கவும் பழகிக் கொண்டோம்
உறவுகளை நாம் பெற்றோம்
நண்பர்களைக் கண்டெடுத்தோம்
தேவைகளைப் பூர்த்தி செய்ய
அனைத்தும் நாம் கற்றும் கொண்டோம்.


ஒன்றை இழக்கையிலே
ஓராயிரம் நாம் பெறுவோம்
இழந்ததையே நினைத்திருந்தால்
புதியதையே பெற மறப்போம்
எதையும் இழக்கும் பொழுதெல்லாம்
இதை நினைக்கும் மனமிருந்தால்
இருக்கையிலே போற்றினாலும்
இழக்கையிலே மனம் வருந்தோம்
இனிப் பெறுவதென்னவென்றே
இன்முகத்துடன் எதிர்பார்ப்போம்.


Offline Yousuf

Re: மாற்றம்
« Reply #1 on: February 09, 2012, 09:44:17 AM »

ஒன்றை இழக்கையிலே
ஓராயிரம் நாம் பெறுவோம்
இழந்ததையே நினைத்திருந்தால்
புதியதையே பெற மறப்போம்
எதையும் இழக்கும் பொழுதெல்லாம்
இதை நினைக்கும் மனமிருந்தால்
இருக்கையிலே போற்றினாலும்
இழக்கையிலே மனம் வருந்தோம்
இனிப் பெறுவதென்னவென்றே
இன்முகத்துடன் எதிர்பார்ப்போம்.


இழந்ததை எண்ணி வருந்தாதே அதை விட சிறந்தது கிடைக்கும் என்று தன்னம்பிக்கை எற்படுத்த கூடிய நல்ல கவிதை சகோதரி அணு தொடரட்டும் உங்கள் கவிதை பயணம்!

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 45
  • Total likes: 45
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
Re: மாற்றம்
« Reply #2 on: February 09, 2012, 03:03:11 PM »
ஒன்றை இழக்கையிலே
ஓராயிரம் நாம் பெறுவோம்
இழந்ததையே நினைத்திருந்தால்
புதியதையே பெற மறப்போம்
எதையும் இழக்கும் பொழுதெல்லாம்
இதை நினைக்கும் மனமிருந்தால்
இருக்கையிலே போற்றினாலும்
இழக்கையிலே மனம் வருந்தோம்
இனிப் பெறுவதென்னவென்றே
இன்முகத்துடன் எதிர்பார்ப்போம்.


rombaaaaaaaaaaaa super lines anuma really super ithu mutrilum unmaiyana varigal

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்

Offline RemO

Re: மாற்றம்
« Reply #3 on: February 09, 2012, 06:53:15 PM »
Quote
இழக்கையிலே மனம் வருந்தோம்
இனிப் பெறுவதென்னவென்றே
இன்முகத்துடன் எதிர்பார்ப்போம்.

UNMAIYANA VARIGAL
NALA POEM
I LIK IT

Offline gab

Re: மாற்றம்
« Reply #4 on: February 10, 2012, 03:41:21 AM »
Romba arumaiyaana kavithai varigal Anu friend. Thodarattum ungal kavithai pathivu.

Offline Global Angel

Re: மாற்றம்
« Reply #5 on: February 12, 2012, 01:54:08 AM »
அனும்மா நல்ல கவிதை பதிவு   நிஜம் கொடூரமானது அதை ஏற்கபழகி கொண்டால் ... அதுவே இனிமையாகும் .... நல்ல கருத்துல கவிதை அனும்மா