Author Topic: ~ !! காத்திருப்பேன் உன் வருகை பொய்யாயினும் !! ~  (Read 452 times)

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4584
  • Total likes: 5309
  • Total likes: 5309
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’

காத்திருக்கும் நொடிகள்
யுகங்களாக மாறினாலும் ...

காத்திருக்கும் பொழுது
உறங்கி கண் விழித்தாலும் .....

காத்திருக்கும் தருணம்
ரணங்களாக  மாறினாலும்

காத்திருப்பேன் இறுதிவரை ....
அகன்ற விழிகளுடனும் ....

உதட்டில் பூத்த புன்னகையுடனும் ....
மனதில் உறுதியுடனும் ....

உன் வருகை பொய்யாயினும்  ....
மெய்யாக்கிடக் காத்திருப்பேன் ....
 

~ !! ரித்திகா !! ~

Offline SarithaN

  • Sr. Member
  • *
  • Posts: 468
  • Total likes: 921
  • Total likes: 921
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வலியுணர்ந்த மனிதன் பிறரை துன்புறுத்தான்.....
தங்கையே வணக்கம்,

உன் காத்திருப்பை கண்டேன், கனக்கிறது!

காத்திருப்புக்கள் பலவகை கவிதையின்
காத்திருப்பு என்னவோ?

கவிதையே உன் கொண்ணெதிரே
கண்டோருக்காய் காண்போர்க்காய், காத்திரு!

மௌனத்துக்கு எதிராய் ஒருபோதும்
காத்திருக்காதே என் அன்பு கவிதையே!

காத்திருப்புக்களின் மிக கொடிய எதிரி
மௌனமே!

கவிதையே கவிதையே கலங்காதிரு!

தொடர்ந்து எழுது தங்கையே, வாழ்த்துக்கள்.

வாழ்க வாழ்க வாழ்க வளமுடன்.
நன்றி
உன்னைப் போலவே...அனைவரையும் நேசி...யேசு                       ...... Thou shalt love thy neighbour as thyself. Jesus.....

Offline BlazinG BeautY

  • Full Member
  • *
  • Posts: 182
  • Total likes: 800
  • Total likes: 800
  • Karma: +0/-0
  • Gender: Female
  • வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு!
வணக்கம் ரீதி குட்டி .. அழகான வரிகள் .. காத்திருந்த தருணம் பொய்யாகாமல் மெய்யாய் மாற வாழ்த்துகிறோம்..

உன் வருகை பொய்யாயினும்  ....
மெய்யாக்கிடக் காத்திருப்பேன் ....


கவி பயணம் தொடர வாழ்த்துக்கள் செல்லம்..