நல்நட்பு காதலாதல் சிறப்பு, மறுப்பில்லை!
முகம் தெரியா தளங்களில்
தொடர்கிறது உரையாடல்
ஒலியுமில்லை ஒளியுமில்லை
எழுத்துக்களின் உருவிலே
நட்புறவு வளர்கிறது!
உள்ளங்கள் உள்ளிருந்து
சுரக்கிறது வலிகளெனும் பொக்கிசம்
மனித மனங்களில் யாருக்குத்தான்
கண்ணீர் கிணறு இல்லை!
அவனோ காதலியை உடையான்
அவளோ தனிமையாய் உள்ளாள்
நட்பு தொலைபேசில் நீள்கையில்
சிலசமயம் இருவரும் பேசுகையில்
அவனது முனை மௌனமாகும்
இவளது நட்பில் காதலன்பு உண்டென
கண்டும் மௌனமாவே இருந்தான்
இவனது காதலை அவள் அறியாள்
அப்பாவிப் பெண், பேதை அவள் பாவம்
ஆழமான அன்பு கரிசனை கொண்டாள்
பிரிந்தால் வாழவே முடியா அன்பால் - துவண்டாள்
இலைமறை காயாய் சொன்னது போதும்
காதலை நேரடியாக சொன்னாள் அன்பி
ஐயோ இப்படி பேசாதிங்க அப்படியாக
எண்ணவே இல்லை நட்பை கடந்து....
ஏதுமில்லை எனக்கு காதலியுண்டு!
உதடுகள் வரண்டு இதயம் இறுக
தொண்டைக்கும் நெஞ்சுக்கும் நடுவே
ஏதோ அடைக்கிறது
தொலைபேசி மௌனமாகிட வீட்டில்
யாருக்கும் கேட்காமல் கதறியளவும்?
முடியவில்லை உடைகளை கசக்கி
பிழிவதுபோல் உடலை கசக்கி பிழிகிறாள்
பாவமறியா பட்டுமேனி நூலாய் பிரிகிறாள்!
இணைய காதலை யாரும் அருகிருக்கும்
நட்பிடம் சொல்வதுமில்லை
தனக்குத்தனே சொந்தம் இன்பமும் ரணமும்
இன்னும் அழுகின்றாள் எப்போது ஓயுமோ?
பாவம் அவள் பாவமறியாதவள்.
எத்தைனை பேர் காதலித்தார்
நான் மன்மதனென மகாராணியென
எண்ணி பெருமை கொள்ளாதிருங்கள்
அற்பமான பெருமைக்காக அன்புகொண்ட
இதயங்களை மரணம்வரை அழவைத்தல்
கொலையிலும் கொடிய குற்றம்
குறிப்பு:
தயவாய் எல்லாருக்கும் எனது விண்ணப்பம்
நல்நட்பு காதலாதல் சிறப்பு, மறுப்பில்லை!
காதல் உள்ளவர்கள், திருமணம் ஆனவர்கள்
நட்போடு பழகையில், பழகும் தோழமை
ஆழமாய் வளர்கையில் உண்மையை சொல்லுங்கள்,
ஆபத்தில் தள்ளி நம்பிய தோழமையை கொல்லாதிருங்கள்.
குறைகள் என்னுடையவை நிறைவுகள் கடவுளால்
நன்றியும் மேன்மையும் கடவுளுக்கே