Author Topic: அப்பா  (Read 1044 times)

Offline thamilan

அப்பா
« on: December 14, 2016, 07:52:23 PM »
மரணம் மரணம் என்று
எங்கெங்கோ சொல்வதை
காதில் கேட்டு வைத்தேன் .....

ஆனால்!!!!
மரணம் என்ற வார்த்தை எனது
மனதை ரணமாக்கியது
உனது மரணத்தைக் கண்டபோது தான்..........

வெளிச்சம் நின்ற பிறகே
நான் உணர்ந்தேன்
நீ ஒரு மெழுகென .......

அப்பா
இப்போது நாங்கள் இருட்டில்
உனது இருட்டு
எங்கள் வாழ்வில் வெளிச்சம்
நீ தேய்ந்ததனால் நாங்கள்
உருப்பெற்றோம்

எழுபத்து ஐந்து வருட
உன் தவத்தின் வெற்றியின் வடிவமாக
உன் பிள்ளைகள் நாங்கள் .......

இறைவனை
காணச் செல்லும்
உந்தன்
மகிழ்ச்சிப் பயணத்தை
கண்ணீர் மல்க
தாழ்மையுடன் வணங்குகிறேன் !!!!!!


Offline SarithaN

  • Sr. Member
  • *
  • Posts: 468
  • Total likes: 921
  • Total likes: 921
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வலியுணர்ந்த மனிதன் பிறரை துன்புறுத்தான்.....
Re: அப்பா
« Reply #1 on: December 14, 2016, 10:03:46 PM »
தமிழ் வணக்கம்,

அப்பாக்கள் உருகும் மெழுகுகள்
ஆயுளை உருக்கி நம்முடல்
வளர்ப்பார்கள்!

அப்பா எனும் அர்ப்பணம் படிக்க
திகட்டாத தொடர்களை.

என் வாழ்வில் நான் படித்தா
ஒரே நன்னெறி  நூல் அப்பா!.

அழகான அப்பா அன்பு! தமிழ்.

வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்.
நன்றி
உன்னைப் போலவே...அனைவரையும் நேசி...யேசு                       ...... Thou shalt love thy neighbour as thyself. Jesus.....

Offline AnoTH

Re: அப்பா
« Reply #2 on: December 16, 2016, 11:25:13 PM »
ஈடு இல்லா இழப்பு
இணையில்லா உறவு
இனிதொரு முறை வராது
இதயம் உருகிய வரிகளில்
இமைகள் மல்க

எனது பாராட்டுதல்
தங்களின் அன்பின் வழி வந்த
வரித்துளிகளுக்கு

Offline BlazinG BeautY

  • Full Member
  • *
  • Posts: 182
  • Total likes: 800
  • Total likes: 800
  • Karma: +0/-0
  • Gender: Female
  • வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு!
Re: அப்பா
« Reply #3 on: December 20, 2016, 07:40:02 PM »
வணக்கம் தோழா.. அழகான  வரிகள்  .. என்  மனதை   வருத்திய  வரிகள் .. வர  போவதை  என்னால்  எதிர்  நோக்க  முடியுமா  என்னால் .. live  long இருக்கனும் .. நான்  உள்ள  வரை ..