சகோதரா வணக்கம்,
இணைய உலகில் இணையா தவிப்பினால்
தொலைக்கப்படும் இளமை பருவமும்
வாழ்க்கையும் வேதனையானவை!.
தடைகள் தகர்த்து, தூரங்கள் கடந்து, அன்பில்
இணைந்தவர்கள் உண்டுதான் ஆனாலும்
பிரிவின் வலியால் வாழ்வை தொலைத்து
அழுபவர்கள் மிகமிக அதிகம்.
அறிவுக்கு தெரிகிறது மனது மறக்கிறது
அனுபவித்தே தெளிவேன் என்கிறது!
மாயை உலகம்.
இணையத்தில் நட்பாய் உறவாய் கிடைகும்வரை
ஏங்குகிறது மனது, கிடைத்தபின் புதிதை தேடி
அலைகிறது, புதியவை அமைய அமைய இலாபம்
எதிலென அலைகிறது, இணையத்தில் அன்பு
இல்லாமல் இல்லை, ஆனால் அன்பென மயக்கும்
முகமூடி கொண்டு ஆறாத்துயரில் தள்ளுவாரை
இனம்கண்டு கொள்ளல் வாழ்வுக்கு மகிழ்ச்சி!.
சகோதரா அவலத்தை சொல்ல காரியங்கள் செய்யும்
வேளை நீங்களும் அத்தனை தெளிவாய் சொல்லிவிட
எனது உழைப்பு வீணானது,
உங்கள் கருத்தை நான் களாவாடியதாக கொண்டே எனது
உருவாக்கத்தையும் விரைவில் பதிவிடுகின்றேன்,
சகோதரனின் சிந்தையை களவாடிய பெருமையுடன்
இருந்து விடுவேன்.
கவிதை, இணைய காதலின் தெளிவான காட்ச்சி, சகோதரா.
வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன், நன்றி