Author Topic: காதலை காணவில்லை !!  (Read 469 times)

Offline KaBaLi

காதலை காணவில்லை !!
« on: November 30, 2016, 01:02:26 AM »
எல்லா திசைகளிலும்
தேடிவிட்டேன்
ஆழம் தோண்டி
பார்த்துவிட்டேன்

உதிரம் கலந்த காற்றாய்
உணர்வுகள் கலந்த உடலாய்
எங்கு ஊற்றெடுக்கிறாய் ?

இதயத்தின் எந்த மூலையில்
துடித்துக் கொண்டிருக்கிறாய் ?

என் தேசத்தின் எந்த மூலையில்
படையெடுத்தாய் ?

என்றாவது கண்டுப்பிடிப்பேன்
காதலுக்குள் உன்னை !

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4584
  • Total likes: 5309
  • Total likes: 5309
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: காதலை காணவில்லை !!
« Reply #1 on: December 02, 2016, 11:05:37 AM »
வணக்கம்.... வந்தனம்.....

தோழர் கபாலி ....

கவிதைப் பூங்காவிற்கு தங்களை ....
வருக வருக வருக என
வரவேற்கிறேன் ......

ஆரம்பமே அசத்தலாக உள்ளது ....
அழகான வரிகள் ....
அருமையான கவிதை .....
~ !! வாழ்த்துக்கள் !! ~

சீக்கிரமே உங்களை ஆட்டிப்படைக்கும்
அக்காதல் தேவியைக் கண்டுபிடிக்கவும் ....

இக்கவிப்பயணம் மென்மேலும் சிறப்பாகத்
தொடரவும் எனது மனமார்ந்த
~ !! வாழ்த்துக்கள் !! ~

~ !! நன்றி !! ~
               



~ !! ரித்திகா !! ~
« Last Edit: December 02, 2016, 11:57:02 AM by ரித்திகா »


Offline SarithaN

  • Sr. Member
  • *
  • Posts: 468
  • Total likes: 921
  • Total likes: 921
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வலியுணர்ந்த மனிதன் பிறரை துன்புறுத்தான்.....
Re: காதலை காணவில்லை !!
« Reply #2 on: December 10, 2016, 03:07:31 AM »
வணக்கம் தம்பி,
நல்ல தேடல்
இதமான வரிகள்
சுருங்க தேடினாய்
விரிந்த உலகில்,

அனுபவம் சொல்கின்றேன்,
நீ தேடுவதை கண்டு கொண்டால்
மாண்டு மீண்டெழவேண்டும்
தெரிந்து கொண்டு தேடு.

சீக்கிரமே உங்களை ஆட்டிப்படைக்கும்
அக்காதல் தேவியைக் கண்டுபிடிக்கவும் ....

சனிமேல் நம்பிக்கை இல்லை ஆனால் அது
யாரையும் விடுவதில்லையாமே

வாழ்க வளமுடன், நன்றி   
உன்னைப் போலவே...அனைவரையும் நேசி...யேசு                       ...... Thou shalt love thy neighbour as thyself. Jesus.....

Offline KaBaLi

Re: காதலை காணவில்லை !!
« Reply #3 on: January 07, 2017, 12:10:54 PM »
Nandiral pala !!!

Offline SweeTie

Re: காதலை காணவில்லை !!
« Reply #4 on: January 07, 2017, 07:13:37 PM »
கபாலி  நீண்ட நாட்களின் பின்  உங்கள் கவிதையை காண்கிறேன்.   
தட்டுங்கள் திறக்கப்படும்   கேளுங்கள் கொடுக்கப்படும்   தேடுங்கள் 
கண்டடைவீர்கள் ....  உங்கள் முயற்சி  ஒருநாள் வெல்லும்.  வாழ்த்துக்கள்

சரிதனுக்கு  சனி மேல் நம்பிக்கை அதிகம்.    நீங்கள்  காதல் மேல் மட்டும்
நம்பிக்கை வையுங்கள்.      வெற்றி நிட்ச்சயம்