உன்னிடம் சொல்லப்போவதில்லை
எதுவும்
நீயில்லாத தனிமையில்
நட்சத்திரங்கள் மறையும் போது
விண்ணுக்குள் நானும் புதைவதை.........
சுவாசிக்கும் பொழுதுகளில்
காற்றே பாரமாவதை........
உணர்வுகள் உள்ளுக்குள் உடைந்து
துகள்களாகி ரணமாவதை.........
இதயத்துக்குள் ஒளிந்திருக்கும் உயிர்
உடைந்த எலும்பாய்
உள்ளுக்குள் உருத்திக் கொண்டிருப்பதை........
காமத்தின் பிழம்பிடையே
உன் பிம்பம் காதலுடன் சிரிப்பதை.......
உன்னிடம் சொல்லப்போவதில்லை
எதுவும்!!!