மண்ணுலகின் பெண்ணிலவே !!
உன்னைக்காட்டிலும்
கண்கவர்
இரு கன்னம்
கொண்டவளாய்
தன்னைக்காட்டிக்கொள்ள
விண்னைவிட்டு
வெகுவேகமாய்
மண்ணை வந்து சேர்ந்து
உன்னை தனிமையில் சந்தித்து
நின் கன்னக்குழிகளை
கடன் கோரிடும்
எண்ணம் கொண்டுள்ளது
நிலவு .
கன்னக்குழிக்கடன்
கிடைக்கா கடுப்பினில்
தன் எண்ணக்கனவது
நடக்கா கிடப்பினில்
ஆண்டாண்டு காலம்
பலநூறு ஆண்டுகளாய்
மிக பொலிவான
தன்முகத்தினை
பாலினில் முகம்புதைத்து
"பால் நிலவு "என
பெயர்பெற்றுந்தான்
பயனென்னவென்று
மண்ணுலகின் பெண்ணிலவே
நீ,முகம் கழுவி
மீதமுள்ள நீர்குளத்தில்
முகம்புதைத்து
மிதக்கின்றது
விண்ணுலகின் வெண்ணிலவு