Author Topic: ~ அவல் களி ~  (Read 340 times)

Offline MysteRy

~ அவல் களி ~
« on: November 17, 2016, 09:44:01 PM »
அவல் களி



என்னென்ன தேவை?

அவல் – 1 கப்,
புளித்த தயிர் – 1½ கப்,
பச்சைமிளகாய் – 2,
காய்ந்தமிளகாய் – 2,
உப்பு – தேவைக்கு.

தாளிக்க…

கடுகு – 1/2 டீஸ்பூன்,
கடலைப்பருப்பு – 1 டீஸ்பூன்,
எண்ணெய்- தேவைக்கு,
உளுத்தம்பருப்பு – 1 டீஸ்பூன்,
கறிவேப்பிலை – 1 கொத்து.

எப்படிச் செய்வது?

அவலை, புளித்த தயிரில் 1/2 மணிநேரம் ஊற வைக்கவும். பிறகு ஊறிய அவல், பச்சைமிளகாய், உப்பு மூன்றையும் அரைத்து தோசை மாவு பதத்திற்கு கரைக்கவும். கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, காய்ந்தமிளகாய் சேர்த்து வதக்கி, அரைத்த மாவை சேர்த்து கிளறவும். சிறிது நேரத்தில் கெட்டியாக உருண்டு வரும் பொழுது எண்ணெய் தடவிய தட்டில் கொட்டி ஆறவிடவும். ஆறியதும் துண்டுகள் போட்டு பரிமாறவும்.