Author Topic: பனியில் இருந்து பட்டுக்கூந்தலை பாதுகாக்க டிப்ஸ்….!  (Read 1023 times)

Offline RemO

பட்டுப் போன்ற கூந்தல் பெண்களின் அடையாளம். கார் கூந்தலைப் பற்றி பாடாத கவிஞர்களே இல்லை எனலாம். பனிக்காலம் வந்துவிட்டாலே அதிகம் பாதிப்பிற்குள்ளாவது சருமமும், கூந்தலும்தான். பட்டுக்கூந்தலை பனியில் இருந்து பாதுகாக்க அழகியல் நிபுணர்கள் தரும் டிப்ஸ் இங்கே…

குளிர்காலத்தில் கூந்தலின் ஈரப்பதம் பாதிப்பிற்குள்ளாவது இயல்பு. இதனால் நுனி வெடித்து கூந்தலின் அழகு பாதிக்கப்படும் எனவே கூந்தலின் ஈரப்பதத்தை தக்கவைக்க மாய்ஸ்சரைசர் உபயோகிக்கலாம். இதனால் கூந்தலின் உலர்தன்மை கட்டுப்படும்.

என்னதான் தலைபோகிற வேலையாக இருந்தாலும் தலையை பாதுகாக்க நிறைய தண்ணீர் குடிக்கவேண்டும். குளிர்காலத்தில் குறைந்தபட்சம் 8 முதல் 10 டம்ளர் தண்ணீர் வரை குடித்தால் கூந்தல் உலர்ந்து போவதில் இருந்து தடுக்கப்படும்.

லூஸ் ஹேர் வேண்டாம்

மாசடைந்த இன்றைய சுற்றுப்புறச் சூழலில் லூஸ் ஹேர் விடுவது கூந்தலுக்கு ஆபத்தானது என்கின்றனர் ஆய்வாளர்கள். எனவே வீட்டை விட்டு வெளியே கிளம்பினாலே பின்னல் போட்டு இறுக்கி கட்டவேண்டும் என்கின்றனர் அழகியல் வல்லுநர்கள். இதுவே பாதுகாப்பானது என்கின்றனர் அவர்கள்.

கர்ச்சீப் கவசம் அவசியம்


அதிகாலையில் பனி பெய்யும் போது வீட்டைவிட்டு வெளியே செல்ல நேர்ந்தால் தலையில் துணியை வைத்து கட்டிக்கொள்ள வேண்டும். ஏனெனில் குளிர் காற்று கூந்தலை தாக்கினால் கூந்தலின் ஈரப்பதம் பாதிக்கப்படுவதோடு டல்லாகிவிடும் அதை தவிர்க்கவே இந்த துணிக் கவசம்.

வாரம் ஒருமுறை எண்ணெய் குளியல்

தேங்காய் எண்ணெயை லேசாக சூடாக்கி அதனுடன், ஆலிவ் அல்லது பாதாம் மற்றும் விளக்கெண்ணெய் சேர்த்து தலைக்கு மசாஜ் செய்ய வேண்டும். இதனால் தலை புத்துணர்ச்சி அடைவதோடு கூந்தல் பாதுகாக்கப்படும்.

வெது வெதுப்பான நன்னீர்

எப்பொழுதுமே கூந்தலை வெதுவெதுப்பான நீரிலேயே அலசவேண்டும். அதீத சூடு நீரில் அலசினால் கூந்தல் உடைந்து பாதிப்பு ஏற்படும் என்பது அழகியல் நிபுணர்களின் அறிவுரையாகும்.