Author Topic: காலம் கடந்துவிடும்  (Read 721 times)

Offline SweeTie

காலம் கடந்துவிடும்
« on: November 11, 2016, 08:32:49 PM »
கடந்துபோகும் வாழ்க்கையில் நிலையில்லா மனிதர்கள்
வளர்ந்து வரும் சமூகத்தின் தீராத வியாதிகள்
பார்க்கும் பார்வைகளில் விஷம் கக்கும் சந்தேகம்
கேக்கும்  பேச்சுக்களில்  தீயனவும்  கெட்டதுவும்
பேசும் வார்த்தைகளில் அமிலமாய் கலக்கும் நஞ்சு
நம்பிக்கை  நாணயம் வெருண்டோடி  நாளானதுவோ!

சூது  வாது  தெரியாத  பச்சைக்குழந்தை  என
சுற்றமும்  சூழ்ந்தோரும்  போற்றிய காலமும்  போய்
மதிக்கத்  தெரியாத  புழுக்கைப் பயல்  என
மற்றோரும் கற்றோரும் தூற்றும்  நிலையானதுவோ!
சீர்கெட்ட சமுதாயம் திருந்த வழிதான் என்னவோ!

குலை குலையாய் கொலைகளும் கொள்ளைகளும் செய்திடுவர்
செய்வதொன்றும் தப்பில்லையென சித்தாந்தம்  பேசிடுவர்
அருள்வாக்கு  என்றெண்ணி  அவதூறு  கூறிடுவர்
மனச்சாட்சி  என்றொன்று  இருப்பதையே மறந்திடுவர்
என்றோ விதைத்த விதை அறுவடைக்கு வரும்போது
காலம் கடந்துவிடும்   கண்ணீரும் மல்கிவிடும்....

 

Offline AnoTH

Re: காலம் கடந்துவிடும்
« Reply #1 on: November 11, 2016, 08:52:42 PM »
பார்க்கும் பார்வைகளில் விஷம் கக்கும் சந்தேகம்
கேக்கும்  பேச்சுக்களில்  தீயனவும்  கெட்டதுவும்
பேசும் வார்த்தைகளில் அமிலமாய் கலக்கும் நஞ்சு
நம்பிக்கை  நாணயம் வெருண்டோடி  நாளானதுவோ!


கவிதையில் சமூகத்தின் மீது
இருக்கக்கூடிய அவலங்களை
உணர்ந்துவிட முடிகிறது.

மகா கவி பாரதியாருக்கு  இருந்த அதே கோபம் 
இன்று உங்கள் வரிகளிலும்  கண்டேன்
வாழ்த்துக்கள் அக்கா
« Last Edit: November 12, 2016, 12:32:17 PM by AnoTH »

Offline BlazinG BeautY

  • Full Member
  • *
  • Posts: 182
  • Total likes: 800
  • Total likes: 800
  • Karma: +0/-0
  • Gender: Female
  • வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு!
Re: காலம் கடந்துவிடும்
« Reply #2 on: November 12, 2016, 09:16:51 AM »
வணக்கம் தோழி. உங்களை போல் அழகான வரிகள். உண்மைகள் ஒவ்வுன்றும் உண்மையே. நன்மை கொஞ்ச கொஞ்சமா காணாம போய்டும் தீமைகள் தலைதூக்கும். உலகம் அழுகிறது, மன்னிக்கவும்.எனக்கு எப்படி சொல்றதுன்னு தெரியவில்லை.உங்கள் கவி எப்போதும் போல அருமை..

Offline DaffoDillieS

Re: காலம் கடந்துவிடும்
« Reply #3 on: November 12, 2016, 10:44:10 AM »
Wow .. nailed it

Offline GuruTN

Re: காலம் கடந்துவிடும்
« Reply #4 on: November 12, 2016, 12:05:51 PM »
உலகின் உண்மை நிலையை நினைத்து இதயத்தில் எழும் கோபம், வரிகளில் அல்ல, சொற்களில் அல்ல, ஒவ்வோர் எழுத்திலும் உணர முடிகிறது.. அசத்திவிட்டிர்கள்... காலம் கடந்த பின்பு வருந்தி பயனில்லை நல்வழியில் தொடர்வோம் வாழ்வை என்ற கருத்தை மிக அழகாக நிலை நிறுத்தி இருக்கின்றீர்கள்... அருமையான கவிதை தோழி.. அன்பு வாழ்த்துக்கள்..

Offline SweeTie

Re: காலம் கடந்துவிடும்
« Reply #5 on: November 12, 2016, 09:25:52 PM »
நன்றிகள்.  ANOTH,  BLAZING,  DAFFADILLIES  AND  GURU TN
எதோ  ஒரு நினைப்பு.       எங்கும் அநீதி ... எதிலும் கலப்படம்.   வாழ்க்கையே கஷ்டம்  என்ற நிலை.   நல்லவை செய்வோம் நல்லதே விளையும்.   

Offline JoKe GuY

Re: காலம் கடந்துவிடும்
« Reply #6 on: November 12, 2016, 10:13:18 PM »
அருமை தோழி ஸ்வீட்டியே ....உங்களின் கவிதை சமூக பார்வையில் வாழ்க்கையின் அவலங்களை மிக அழகாக சொல்லி இருக்கிறீர்கள் .நன்றி


 
உன் இதயம் ரோஜாமலராயிருந்தால் பேச்சில் அதன் வாசனை தெரியும்

Offline SweeTie

Re: காலம் கடந்துவிடும்
« Reply #7 on: November 13, 2016, 05:36:49 PM »
நன்றி  தோழரே ....... அவலங்கள்தான்  நம்மை ஆழ்கின்றன

Offline Maran

Re: காலம் கடந்துவிடும்
« Reply #8 on: November 13, 2016, 06:26:03 PM »



மிக அருமையான வரிகள், வார்த்தையின் வளமை அழகூட்டுகிறது கவிக்கு. எனது வாழ்த்துக்கள் தோழி.

உணர்ச்சிப் பூர்வமான கேள்விதான் நியாயமான கோபம் கூட...

நமக்கு ஏன்?? ஒற்றைக்கேள்விகளால் தான் பல யதார்த்தங்கள் நியதிகள் இன்றி காத்துக் கொண்டிருக்கிறது.





Offline LoLiTa

Re: காலம் கடந்துவிடும்
« Reply #9 on: November 15, 2016, 04:34:07 PM »
Sweetie sis eh kavidhai podrepo embutu alaga irku :P

Naraya eluthunge sweetie

Offline SweeTie

Re: காலம் கடந்துவிடும்
« Reply #10 on: November 16, 2016, 03:39:45 AM »
நன்றி  தோழர் மாறன்  தோழி லொலிடா.

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4584
  • Total likes: 5309
  • Total likes: 5309
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: காலம் கடந்துவிடும்
« Reply #11 on: November 19, 2016, 07:11:43 AM »

வணக்கம் ஸ்வீட்டி பேபி .....

இப்பொது நாம் வாழ்ந்து வரும்
வாழ்க்கை சூழ்நிலையை மிக அழகாக
கவிப்படைப்பாகப்  படைத்துள்ளீர் ...
இத்தகைய கொந்தளிப்பு அனைவரின் மனதிலும்
எழத்தான் செய்கிறது ....செய்வதறியாது
அடங்கியும் போய்விடுகிறது ....
அடங்கும் நேரம் காலமும் கடந்துவிடுகிறது .....

அழகான கவிதை பேபி .....
கொந்தளிப்பு சாந்தம் ஆகட்டும்  .....
கவிப்பயணம் மென்மேலும் தொடரட்டும் .....
வாழ்த்துக்கள் ..........


~ !!ரித்திகா!! ~

Offline SarithaN

  • Sr. Member
  • *
  • Posts: 468
  • Total likes: 921
  • Total likes: 921
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வலியுணர்ந்த மனிதன் பிறரை துன்புறுத்தான்.....
Re: காலம் கடந்துவிடும்
« Reply #12 on: December 10, 2016, 01:40:21 PM »
வணக்கம் இனியவள்,

கவிதையுள் விலைமதிப்பில்லா வெகுமதிகள்
உலகின் உண்மை நிலை நன்மைகள்யாவும்
மறைந்து போயின
மானிடன் மனிதத்தை தொலைத்த அழுகுரல்
வேதனையும் வலிகளுமே நிறைந்த பூமி
யார் யாரை குறைசொல்வது
அவரவரே தன்னை தான் மாற்றிடல் நன்று

ஒரு வரியேனும் பொருளேனும் தேவையற்றதாய் இல்லை
தேனாயன்றி அனலாய் எரிகிறது!

கவிதை கருக்கள் உலகுக்கு தேவையான மீட்டெடுப்புக்கள்

வாழ்த்துக்கள் தொடர்க பயணம், நன்றி

வாழ்க வளமுடன்
« Last Edit: December 11, 2016, 01:17:03 PM by SarithaN »
உன்னைப் போலவே...அனைவரையும் நேசி...யேசு                       ...... Thou shalt love thy neighbour as thyself. Jesus.....

Offline SweeTie

Re: காலம் கடந்துவிடும்
« Reply #13 on: December 11, 2016, 05:54:24 AM »
நன்றி  தோழி ரித்திகா   தோழர்  சரிதான்