கல்யாணம் என்று வந்துவிட்டாலே
மணமகள் மணமகன் வீட்டில்
ஒரே பரபரப்பு கொண்டாட்டம் தான்.
தன் மகளை மாப்பிள்ளை வீட்டார்
கையில் ஒப்படைத்து நாட்கள் ஆக ஆக
உணரும் தனிமை என்னமோ பெற்றோருக்குத் தான்.
இருப்பினும் தான் செல்லமாக ஓடித் திரிந்த
வீட்டையும் பெற்றோரின் அரவணைப்பில்
வாழ்ந்த வாழ்க்கையும் எந்த ஒரு மணப்பெண்ணும்
கல்யாணம் என்று ஒன்று அமையும் போது
நினைத்து பாக்காமல் இருக்க முடியாது.
மிக அருமையாக அந்த உணர்வை கொடுத்து
விட்டீர்கள் அண்ணா வாழ்த்துக்கள்.
புகுந்த வீடு கூட கோவில் ஆகலாம்
துணைவன் தாயாக மாறிவிட்டால்.