அவளைக்கண்ட மறுநொடியே
கண்கள் விரிந்தது
மறுகனமோ என்னிதயம்
சந்தோஷத்தில் துள்ளிக்குதித்து
மறுதினமே கல்லுக்குள்ளும்
காதல் மலர்ந்தது
மறுதிங்கள் என் வங்கி
கணக்கும் கரைந்தது
மாதங்கள் பறந்ததது
வருடங்கள் உருண்டது
இருமனம் சேர்ந்தது
திருமணமும் முடிந்தது
இரவும் வந்தது
அவளோ கையில் பாற்செம்பேந்திட
நானோ கையில் அவளைஏந்திட
நாணமும் பிறந்திட நடுக்கம்கொண்டது ( அவளுக்கு )
விளக்கை அணைத்திட விடியலும் பிறந்தது
ஈரைந்து திங்களில் முத்தாய்
ஒரு பிள்ளையும் பிறந்திட
தத்தாய் ஒரு பிள்ளையையும் வளர்த்திட
ஆளுக்குஒரு பிள்ளை என இருக்க
ஆனந்தத்தில் அவள்மீது நானோ '
சாய்ந்து கண் அயர்ந்தேன்
எந்தலையில் எதோ மோதிட
கண்திறந்தால் பேருந்திலிருந்தேன்
என்கையில் எதோ மெத்தென்று பட்டிட
என்னவென்று பார்த்தால் அருகிலோ
அவள் தங்கை (தற்போதிய காதலி )
அவளோ என்னவென்று கேட்டிட
எதோ கெட்டக்கனா என்றேன்
முகத்தில் கள்ளச்சிரிப்புடன்
-இணையத்தமிழன்
( மணிகண்டன் )