Author Topic: ~ பிரட் தக்காளி மசால் ~  (Read 330 times)

Offline MysteRy

~ பிரட் தக்காளி மசால் ~
« on: October 31, 2016, 08:43:29 PM »
பிரட் தக்காளி மசால்



தேவையான பொருட்கள் :

பிரட் – 15 ஸ்லைஸ்
சின்ன வெங்காயம் – 150 கிராம்
தக்காளி – கால் கிலோ
கடுகு – ஒரு தேக்கரண்டி
வெள்ளை உளுத்தம் பருப்பு – 2 தேக்கரண்டி
கடலைப் பருப்பு – 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை – ஒரு கொத்து
மஞ்சள் தூள் – 2 சிட்டிகை
எண்ணெய் – ஒரு குழிக்கரண்டி
கொத்தமல்லிதழை – சிறிதளவு
மிளகாய் வற்றல் – 10
மல்லி – ஒரு தேக்கரண்டி
கடலைப்பருப்பு – 2 தேக்கரண்டி
பெருங்காயம் – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

பிரட்டை சிறு சிறு துண்டுகளாக பிய்த்து வைத்துக் கொள்ளவும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு மிளகாய் வற்றல், மல்லி, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், உப்பு இவற்றை போட்டு சிவக்க வறுத்து எடுத்து ஆறியவுடன் பொடி செய்துக்கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு அடுப்பில் வைத்து எண்ணெய் சூடானதும் கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
அத்துடன் சிறிய வெங்காயத்தை (பொடியாக நறுக்கியது) போட்டு சிவக்க வதக்கவும்.
அத்துடன் நறுக்கிய தக்காளி, மஞ்சள் தூள் போட்டு கரண்டியால் நன்கு மசித்து வதக்கவும்.
தக்காளி நன்கு மசிந்தவுடன் வறுத்த பொடி போட்டு நன்கு கிளறவும்.
பிறகு இக்கலவையில் பிரட் துண்டங்களை போட்டு துண்டுகள் உடையாமல் கவனமாக பிரட்டி விட்டு இறக்கி விடவும்.
அகலமான பாத்திரத்தில் பிரட் மசாலாவை எடுத்து அதில் கொத்தமல்லி தழைகளை தூவி அலங்கரித்து பரிமாறவும்.