Author Topic: ~ பாசிப்பருப்பு க்ரீன் பீஸ் சுண்டல்! ~  (Read 415 times)

Offline MysteRy

பாசிப்பருப்பு க்ரீன் பீஸ் சுண்டல்!



தேவையான பொருட்கள் :

பாசிப்பருப்பு – 2 கிண்ணம்
பச்சைப்பட்டாணி( ப்ரஷ்) – 1 கிண்ணம்
தேங்காய்த் துருவல் – 3 தேக்கரண்டி
இஞ்சி – சிறுதுண்டு
பச்சைமிளகாய் – 2
கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு – தேவைக்கேற்ப

தாளிக்க:

எண்ணெய் – 2 தேக்கரண்டி
கடுகு, உளுந்து- 1 தேக்கரண்டி
பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை

செய்முறை:

பாசிப்பருப்பை வெறும் வாணலியில் சிவக்க வறுத்து அரைமணி நேரம் ஊறவிட்டு, ஊறிய பருப்பை குக்கரினுள் இட்லித் தட்டில் பரப்பி 1 விசில் விட்டு இறக்கவும். பின்னர், வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் கடுகு, உளுந்து, பெருங்காயம் தாளிக்கவும்.
அத்துடன் பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், தேங்காய்த் துருவல், கறிவேப்பிலை சேர்த்து கிளறிவிட்டு அவற்றுடன் வெந்த பாசிப்பருப்பு மற்றும் பச்சைப்பட்டாணி, உப்புச் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும். பாசிப்பருப்பு க்ரீன் பீஸ் சுண்டல் தயார்