Author Topic: ~ பாதாம் அல்வா செய்முறை ~  (Read 305 times)

Offline MysteRy

~ பாதாம் அல்வா செய்முறை ~
« on: October 31, 2016, 08:26:33 PM »
பாதாம் அல்வா செய்முறை



தேவையானவை:

பாதாம் பருப்பு – 100 கி
ஜீனி – 200 கி
நெய் – 20 கி
பால் – 1 கரண்டி
குங்குமப்பூ – சிறிது.
பெல் ப்ராண்ட் யெல்லோ ஃபுட் கலர் – 1 சிட்டிகை.

செய்முறை:

பாதாம் பருப்புக்களை 2 மணி நேரம் கொதிநீரில் ஊறவைத்து தோலுரிக்கவும். சிறிது பால் சேர்த்து கரகரப்பாக அரைக்கவும். பானில் அரைத்த பாதாம் ., ஜீனி போட்டு மிதமான தீயில் கிளறவும். அல்வா சட்டியில் ஒட்டாமல் கரண்டியில் திரண்டு ஒட்டிக் கொள்ளும் போது அடுப்பை அணைத்து பானை கீழே இறக்கி வைக்கவும். உருக்கிய நெய்யை கொஞ்சம் கொஞ்சமாக விட்டுக் கொண்டே கை விடாமல் கிளறவும். மொத்த நெய்யும் உறிஞ்சப்பட்டபின் தொட்டால் கையில் அல்வா ஒட்டாது. குங்குமப்பூவை போட்டு சூடாக அல்வாவை பரிமாறவும்.