காதலின் வழியில் தலைவியை எண்ணி புன்னகைக்கும் தலைவன், திடீரென ஒருவர் அருகில் வரும்போது "அடடா பார்த்திருப்பானோ" என்று தலையை தட்டி கொள்ளும் காட்சி கொடுக்கும் இன்பம் தனி... "என்னை எனக்கே பிடிக்காது" என்று சொல்பவர்களை கூட, இப்படி ஒரு அழகான காதல் நம்முள் இருக்கின்றதே என்றெண்ணி அவரை அவரே நேசிக்க வழி செய்யும் அந்த காதல்...
"நீ தந்த காதலினால் பித்தனாகி சிரிக்கிறேன், ஆனால் நீயோ!!!" என்று நிறுத்தி விட்டீர்கள்... அவளுக்கு இருக்கும் காயங்கள் யாவையும் அவளே அறிவாள், அது கூட வெளிப்படும் அவளது பொய் பூசிய புன்னகையை அவள் வாழ்நாள் இறுதி வரை வெளிப்படுத்த முயலும்போது...
அருமையான கவிதை தோழா, அன்பு வாழ்த்துக்கள்... அசத்தல் தொடரட்டும்...