விடியலுக்கு இன்னும்
சில கணங்கள்
புற்தரைகள் எங்கும்
பனித்துளிகள்
சூரிய ஒளியின் வரவுக்காய்
மரங்கள் தரும் வரவேற்பு
மண்தரையெங்கும்
பூக்களின் சிதறல்
பட்சிகள் பறக்க
செந்நிறத்தில் வானம் வெளுக்க
குங்குமமும், சந்தனமும்
தேனில் கலந்த அற்புதக்காட்சி
அதிகாலைகள் தோறும்
அற்புதங்கள்தான்
ரசித்து மகிழ்ந்தால்
வாழ்வெங்கும் ஆனந்தங்கள்தான்..
சோர்வுகள் விரட்டி
இலக்குகள் நோக்கி
விரைந்தால் வாழ்வில்
வெற்றிகள் எல்லாம்
காத்திருக்கும் நம்
காலடியில்...
காலைப் பனியாய்
துயரங்கள்
தூரமாய் ஒதுங்கும்...
வாழ்க்கை என்பது
மகத்தானதாய் மலரும்..
எழுந்திரு தோழா..
நாளைய பொழுது
நமக்காக காத்திருக்கின்றது...