Author Topic: ~ வேர்க்கடலை கொழுக்கட்டை ~  (Read 365 times)

Offline MysteRy

வேர்க்கடலை கொழுக்கட்டை





அரிசி மாவு – 1/4 கப்,
தண்ணீர் – 1/2 கப்,
உப்பு – தேவைக்கு,
சர்க்கரை – 1 டீஸ்பூன்,
நெய் – 1 டேபிள்ஸ்பூன்.

பூரணத்திற்கு…

பொடித்த வேர்க்கடலை – 1/4 கப்,
வெல்லம் – 1/4 கப் + 2 டேபிள்ஸ்பூன்,
அரிசி மாவு – 1/4 டீஸ்பூன்,
ஏலக்காய் தூள் – 1/2 டீஸ்பூன்,
நெய் – 1 டேபிள்ஸ்பூன்,
தேங்காய்த்துருவல் – 2 டேபிள்ஸ்பூன்.

எப்படிச் செய்வது?

கடாயில் தண்ணீர், உப்பு, சர்க்கரை, நெய் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். இத்துடன் அரிசி மாவு சேர்த்து நன்கு கலந்து மூடிவைத்து வேக விடவும். மற்றொரு கடாயில் வெல்லத்தை கரைத்து, வேர்க்கடலை, தேங்காய்த்துருவல், ஏலக்காய் தூள், அரிசி மாவு, நெய் சேர்த்து நன்கு கலக்கவும். ஆறியதும் சிறு சிறு உருண்டைகளாக செய்து கொள்ளவும். கொழுக்கட்டை அச்சில் மேல் மாவை வைத்து உள்ளே பூரணத்தை வைத்து மூடி ஆவியில் 10-12 நிமிடம் வேகவைத்து எடுத்து பரிமாறவும்.