Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
நண்பர்கள் இணையதள பொதுமன்றம் உங்களை வரவேட்கிறது ,உங்களை பொது மன்றத்தில் இணைத்துக்கொள்ள தொடர்பு கொள்ளவும்,
[email protected]
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
Special Category
»
சமையல் கலசம்
»
~ சுவையான வெஜிடபிள் சமோசா செய்வது எப்படி ~
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: ~ சுவையான வெஜிடபிள் சமோசா செய்வது எப்படி ~ (Read 446 times)
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 224917
Total likes: 28334
Total likes: 28334
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
~ சுவையான வெஜிடபிள் சமோசா செய்வது எப்படி ~
«
on:
October 14, 2016, 09:32:40 PM »
சுவையான வெஜிடபிள் சமோசா செய்வது எப்படி
தேவையான பொருட்கள் :
மைதா மாவு – 250 கிராம்,
உருளைக்கிழங்கு – 250 கிராம்,
பச்சைப் பட்டாணி – 50 கிராம்,
பச்சை மிளகாய் – ஒரு டேபிள்ஸ்பூன்
இஞ்சி விழுது – ஒரு டேபிள்ஸ்பூன்,
மஞ்சள்தூள் – ஒரு டீஸ்பூன்,
முந்திரித் துண்டுகள் – 10,
சீரகம், சோம்பு – தலா ஒரு டீஸ்பூன்,
நறுக்கிய கொத்தமல்லித் தழை – 2 டேபிள்ஸ்பூன்,
கரம்மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன்,
வனஸ்பதி 50 கிராம்,
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை:
* பச்சைப் பட்டாணி, கேரட், பீன்ஸ், நறுக்கிய உருளைக்கிழங்கை சிறிதளவு உப்பு சேர்த்து குழையாமல் வேக வைத்து நீரை வடிகட்டி வைக்கவும். உருளைக்கிழங்கை தோல் உரித்து மசித்து வைக்கவும்.
* ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, உப்பு, சீரகத்தூள், லேசாக சூடாக்கிய வனஸ்பதி சேர்த்து நன்றாக கலந்த பின் நீர் விட்டு பூரி மாவு பதத்தில் பிசைந்து, எட்டு பாகங்களாக செய்து, நீளவாக்கில் தேய்க்க வேண்டும்.
* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு போட்டு தாளித்த பின் முந்திரி சேர்த்து, வறுத்த பிறகு பச்சை மிளகாய், இஞ்சி விழுது சேர்த்து வதக்கவும்.
* அடுத்து அதில் மஞ்சள்தூள், கரம்மசாலாத்தூள் போட்டுக் கிளறிய பின்னர் மசித்த உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ், பட்டாணியை சேர்த்து வதக்கி இறக்கி, கொத்தமல்லித் தழை தூவி வைக்கவும்.
* நீளமாகத் தேய்த்த மாவினை முக்கோணம் வடிவில் செய்து, உருளைக்கிழங்கு மசாலாவை 3 ஸ்பூன் எடுத்து உள்ளே வைத்து மூடி சமோசாக்கள் செய்து வைக்கவும்.
* கடாயில் எண்ணெயை ஊற்றி சூடானதும் அடுப்பை சிம்மில் வைத்து, செய்து வைத்த சமோசாக்களை போட்டு பொரித்து எடுக்கவும்.
* சுவையான சுவையான வெஜிடபிள் சமோசா ரெடி.
குறிப்பு: சமோசாக்கள் மூழ்கும் அளவுக்கு எண்ணெய் இருக்க வேண்டும்.
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
Special Category
»
சமையல் கலசம்
»
~ சுவையான வெஜிடபிள் சமோசா செய்வது எப்படி ~