இனியவளே
உன் ஞாபக நதிக்கரையில்
நடந்து போகிறேன்.....
நினைவுத் தூறல்கள்
என்நெஞ்சில் விழுகின்றன..........
கடலை அந்த
அந்திவானம் முத்தமிட முனைகின்ற
மாலைப்பொழுது........
தொலைபேசி சிணுங்கியது
சந்திக்க வேண்டும் என்கிறாய்
சிந்திக்காமல் நானும்
சந்தோசமாய்
சரி என்றேன்........
கடற்கரைக்கு வரச் சொல்கிறாய்
அண்ணா சமாதிக்கு அருகில்
காத்திருக்கச் சொல்கிறாய்.......
"எதையும் தாங்கும் இதயம்
இங்கே உறங்குகின்றது"
வாசகம் என்னை வாசிக்கிறது.......
நேசிக்கிறவளை பற்றி
யோசிக்கிற பொழுது
பின்னால் இருந்து
தலையை தடவிக் கொடுக்கின்றன
உன் மயில் இறகு விரல்கள்........
"வந்து நீண்ட நேரம்
ஆகிவிட்டதா"
காத்திருப்பது சுமையல்ல
சுகம் என்றேன் .......
அவசரமாக
கொஞ்சம் அலட்சியமாக
என் விரல் பற்றி நடக்கிறாய் .........
நான் கடந்து போவது
கூட தெரியாமல்
காதல் பரிட்சையை
காப்பியடிக்காமல் எழுதிப் பார்க்கும்
நவீன ஆதாம் ஏவாள்களுக்கிடையில்
கடற்கரை மணலில்
எதிரெதிரே அமர்கிறோம் நாம்…..
முகம் பார்க்கிறாய்
மூச்சிக் காற்று
என் முகம் சுடுகிறது.......
விழிகளால் விசாரிக்கிறேன்
திருமணத்துக்கு
தேதி குறித்துவிட்டதாகச் சொல்கிறாய்
வேறு ஒருவனுடன்.....
இறப்புக்கு நாள் குறிப்பது
எனக்கு மட்டுமாகத்தான் இருக்கும்
என்றேன் நான்.......
நீ காதலை
நட்பாக்க முயட்சிக்கிறாய்........
கல்லறைக்கு வரச் சொன்னது
எனது காதலுக்கு
கல்லறை கட்டத்தானா ?!!!!!!!!
என்கிறேன்
நீ
மெளனித்திருக்கிறாய்........
அமிலம் விழுந்தது போல
என் கண்களில்
வெப்ப நீரோட்டம்........
உன் நிழல்
என்னைத் தொடுகிறது ......
கண்துடைத்துப் பார்க்கிறேன்
தூரத்தில் நீ
துயரத்தில் நான்........
நடந்தது செல்கிறாய்
என்னை விட்டு வெகுதூரம்
கடந்து செல்கிறாய்........
நான்
கடற்கரை மணலை
கையில் அள்ளி என்னும் முயற்சியில்
தோற்றுப் போனேன்
என் காதலைப் போலவே......