எப்போதும் நீ சிந்தும்
வார்த்தைகளை
அள்ளிக்கோர்க்க முற்படுகின்றேன்
கைகளில் இருபக்கங்களிலும்
வழிந்தோடும்
அவற்றோடு போராடுகின்றேன்
உடைந்தவை, சிதறியவை
கைபோனவை, கால்போனவை
உருண்டையானவை தட்டையானவை
என்று எல்லாவற்றையும் பாதுகாக்கின்றேன்
ஏனெனில்
அவை எனக்கானவை என்பதால்