Author Topic: சாமியார்கள்  (Read 419 times)

Offline thamilan

சாமியார்கள்
« on: September 28, 2016, 10:59:32 PM »



சாமியார்கள் பலவிதம்
ஒவ்வொரு சாமியாரும் ஒருவிதம்

அப்பாவிகளை ஏமாற்றும் பலே சாமியார்
பக்தர்களை ஏமாற்றும் ஆன்மீக சாமியார்
அடியார்களை ஏமாற்றும் ஆதீன சாமியார்
ஆண்டவனை ஏமாற்றும் அர்ச்சக சாமியார்
சிஷ்யர்களை ஏமாற்றும் குரு சாமியார்
அரசியல்வாதிகளை ஏமாற்றும் ஜோதிட சாமியார்
மங்கையரை ஏமாற்றும் மந்திர சாமியார்
பெற்றோரை ஏமாற்றும் பிள்ளை சாமியார்
வாடிக்கையாளர்களை ஏமாற்றும் வணிக சாமியார்
வணிகர்களை ஏமாற்றும் ஆடிட்டர் சாமியார்
வாசகர்களை ஏமாற்றும் பத்திரிகை சாமியார்
நோயாளிகளை ஏமாற்றும் மருத்துவ சாமியார்
நீதியை ஏமாற்றும் வழக்கறிஞர் சாமியார்
போலீசையே ஏமாற்றும் போலிச் சாமியார்
எல்லோரிடமும் ஏமாறும் ஆண்டவன் சாமியார்
இதில் புத்திசாலி சாமி யார்
 
« Last Edit: September 30, 2016, 05:11:32 PM by thamilan »

Offline SweeTie

Re: சாமியார்கள்
« Reply #1 on: September 29, 2016, 06:31:26 AM »
புத்திசாலி சாமியார்  அந்த பட்டியலில் வராத  ஆசாமிதான்