Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 119  (Read 3434 times)

Offline MysteRy

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 119
இந்த களத்தின்இந்த  நிழல் படம் Reena அவர்களால்  வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்
« Last Edit: October 12, 2018, 10:38:53 AM by MysteRy »

Offline பொய்கை

எறும்புகள் மொய்த்தால்
அந்த இடம் இனிப்பு !

ஈக்கள் மொய்த்தால்
அந்த இடம் வெறுப்பு !

எறும்பென நல்லதை  நாடினால்
எதுவும் தினம்  சிறப்பு !

ஈயென தினம் கெட்டதை நாடினால்
எதுவும் வாழ்வில் சலிப்பு  !

இனியதை சேர்க்கும் எறும்பே
அதுதான்  உந்தன்  இனிய பிறப்பு !

கேட்டதை தேடும் யாவர்க்கும்
வந்திடுமே விரைவில் இறப்பு!

எறும்பில் யான் கற்றேன்
அதன் அயரா உழைப்பு !

என்றும் இல்லை அதன்
வாழ்வுதனில் சலிப்பு  !

கூட்டு முயற்சி என்றும்
பெற்றிடுமே களிப்பு !

எறும்பாக தினம் உழைத்தால்
என்றுமே உன் வாழ்வு இனிப்பு !

சோம்பேறியாய் வீற்றிந்தால் உன்
வாழ்வின் நிறம் என்றுமே கருப்பு !

இனியதை நாடும் யாவர்க்கும்
இது தான் ஒரு துருப்பு !

இதனிடம் பாடம் கற்பது
நமது பொறுப்பு !பொறுப்பு !
« Last Edit: September 25, 2016, 02:16:19 AM by பொய்கை »

Offline ReeNa

இன்னும்  கொஞ்சம்  தூக்கம்
நித்திரை  கடலில்  மயக்கம்
இன்னும்  கொஞ்சம்  உறக்கம்
நடை  வாழ்விலே  தினம்  கலக்கம்

சோம்பலில்  மயங்கிய  சோம்பேறியே
எறும்பிடம்  கற்றுக்கொள்  சுறுசுறுப்பை

கட்டளை  இட  அதிகாரி  இல்லை  இருந்தும்
கோடைகாலத்தில்  ஆகாரம்  சேமித்து
தானியத்தை  அறுப்புக்காலத்தில் சேர்த்துவைக்க 
எறும்பிற்கு யார்  கற்று கொடுத்தது  ?

பரபரவென ஓடி உழைக்கும் எறும்பு
சரசரவென கூட்டுப்பணி செய்யும் எறும்பு
சிறுசிறுவென சிறுக சேமிக்கும் எறும்பு
இதை பார்த்து உழைப்பை கற்க நீ விரும்பு

சோம்பேறி மானிடா
நித்திரை மயக்கத்தில் திளைத்திருக்கும் நீ
எப்பொழுது துயில் எழுவாய்
எப்பொழுது எறும்பிடம் படிப்பினை பெறுவாய்

கடின உழைப்பை உணராதவன்
குறிக்கோளை நிர்ணயிப்பதில்லை
குறிக்கோள் இல்லாதவன் வாழ்வில்
முன்னேறியதாய் சரித்திரம் இல்லை

உழைக்க கற்றுக்கொள்! உயர கற்றுக்கொள்!
« Last Edit: September 25, 2016, 12:37:41 PM by ReeNa »

Offline AnoTH



உலகில் உள்ள உயிர்களில் சிறியவன் நான்
பூமித்தாயின் உணர்வுகளை உணர்ந்திடுபவன் நான்
உயரத்தை எட்ட ஆசை கொள்ளாதவன் நான்
அதிக நாள் வாழ சந்தர்ப்பம் இல்லாதவன் நான்
இப்படி என் இயலாமையைக் கண்டு  சோர்ந்து
போவதலல்ல என் குணம்

தனித்து வாழக் கற்றுக் கொண்டேன்
என்னையும் என் இனத்தையும் பலர்
கலைக்க முற்பட்ட  தருணங்களில்.

அலைந்து திரிந்தேன் நாடோடியாக அல்ல
உறக்கம் வேண்டாமென  இருக்கும் நாட்களை
வீண் விரயம் செய்யாதிருப்பதற்காக. 

வானில் இருந்து வீழும் மழைத்துளிகள்
என் உடலை மூச்சுத்திணற வைக்கலாம்
பூமிப்பந்தில் சுழலும் காற்று என் உடலை
தூக்கி வீசலாம்
நவீன உலகில் வாழும் மனிதர்கள்
குனிய மறுக்கலாம்,
அதுவே என் உடலை நசுக்கிப் போகலாம்.

இப்படி ஆபத்து நிறைந்த வாழ்வில்
என் முயற்சிகள் தோற்றுப்போவதை
விரும்பாதவன் நான்
தடைகளைக்கண்டு அஞ்சுவதும்
அடிபணிவதும் என் இனத்திற்கில்லாத
ஒரு குணம்.

கூடி வாழ்வோம் இல்லையேல்
வீழ்ந்து போவோம்
இதுவே என்னைப்போன்ற
நண்பர்களின் வேத மந்திரம்

ஒற்றுமைக்கு கிடைக்கும் வெற்றி தான்
என் இனத்தின் வெற்றி
எத்தனைச் சுமைகளைச் சுமக்க ஏற்பட்டாலும்
நான் என்ற பிரிவு நாம்
என்ற ஆயுதமாகும் பொழுது
சுமைகள் கூட நாங்கள் விளையாடும்
பந்தாகிவிடும்.


குறிப்பு - நான் என்பதை விட நாம் என்ற சொல்லுக்கு வலிமை அதிகம்
« Last Edit: September 26, 2016, 06:30:58 PM by AnoTH »

Offline thamilan

ஒற்றுமைக்கு உதாரணம்
சுறுசுறுப்புக்கு எடுத்துக் காட்டு
ஓயாத உழைப்புக்கு ஒரு முன்மாதிரி
உருவத்தில் சிறிதானாலும்
யானையே மிரள வைக்கும் எறும்புகள்

எறும்புகள் இந்த பாராட்டுக்கு தகுதியானவையே
எனிலும் ஒரு சந்தேகம்
 
பணக்கார பெற்றோர்கள்
கரம் கொடுக்க உடன்பிறப்புகள்
பரம்பரை சொத்து சுகங்கள்
இவை எல்லாம் எறும்புகளுக்கும் இருந்திருந்தால்
எறும்புகளும் சோம்பேறியாக இருந்திருக்கலாமோ என்னவோ

மனிதனுக்கும் எறும்புகளுக்கு
ஒரு ஒற்றுமை
மனிதன் தனக்காக தன் குடும்பத்திற்காக
தன் எதிர் காலத்திட்டற்காக
பொருள் சேர்கிறான்
எறும்பும் தன் இனத்துக்காகவே
உணவு சேகரிக்கின்றன

புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமிக்கும்
நம் ஊர் அரசியல்வாதிகளை போலவே
எறும்புகளும் ஒரு சிறு துவாரம் கிடைத்தாலும்
அதை ஆக்கிரமித்துக் கொள்கின்றன

இனிப்பு இருக்கும் இடத்தில்
ஈக்கள் தான் மொய்க்கும்
எறும்புகளுக்கு இனிப்பு உறைப்பு
என்ற பாகுபாடே இல்லை
நம்ப ஊரு பிச்சைச்சக்காரர்களை போலவே
எது கிடைத்தாலும் சக்கரைப் பொங்கல் தான்

எறும்புகள் எது கிடைத்தாலும்
தன் இனத்துடன் பகிர்ந்து கொள்ளும்
அது இப்படியும் கூட இருக்கலாம்
சிறு எறும்பால் தன்னை விட பெரிதான
ஒரு சோற்றுப் பருக்கையை கூட
தனியே தூக்கிச் செல்ல முடியாதே
அதற்குத் துணை வேண்டும்
தன் இனத்தின் துணை நாடுகிறது


 பின்குறிப்பு :
கொஞ்சம் எதிர் மாறாக சிந்திக்கலாம்
என்று நினைத்ததின் விளைவு
இந்தக்  கவிதை


Offline JEE

நல்லாத்தான போய்கிட்டுருக்கு..........
ஐம்புலன்களையும் அடக்கியாண்டும்
நல்லாத்தான போய்கிட்டுருக்கு..........


பிறவியிலேயே மெய்யில்லா  வாழ்வு
பிறவியிலேயே வாயில்லா  வாழ்வு
பிறவியிலேயே கண்ணில்லா  வாழ்வு
பிறவியிலேயே மூக்கில்லா  வாழ்வு
பிறவியிலேயே காதில்லா  வாழ்வு.....


ஐம்புலனுமே கெட்ட வாழ்வு
நினைத்து பார்த்தாலே தாங்குமோ?
இருளின் வாழ்வாகுமே........


தனிமையிலே தனக்குள்ளேயே
வட்டமிட்டு இவ்வளவுதான் வாழ்வென
வாழ்வை மாய்க்கும் தனிமைக்கு .....


இருக்கும் புலனை செவ்வனே
இருக்கும்  வரை  பயன்படுத்தும் எறும்பு
கூட்டாய்  வாழும்  அற்புத வாழ்வு 
எண்ணேஎறும்பின் ஐக்கியம்......

நல்லாத்தான போய்கிட்டுருக்கு..........
ஐம்புலன்களையும் அடக்கியாண்டும்
நல்லாத்தான போய்கிட்டுருக்கு..........
இப்படீ கண்டுகிடாம போய்க்கிட்டே இராதே.......

மரண இருளின் பாதையிலேயே
பயணம் செய்யும் எவரையும்
பயப்படாதே   நாங்க   நாங்களிருக்கிறோம் 
என சொல்லவாவது மனிதன் வேண்டுமே .....


நிறையா கற்றுக்கொள்  எறும்பினிடம்
செயல்படாதே.......
தடுக்கிறது உன்னை ஏதென்று பார்.........

நிறையா தோழர்
எதற்கு இவ்வாழ்வு என
இல்லாமல் இருக்கிறார்கள்
தோள் கொடு எறும்பைப் பார்த்து......


வாழ்க வளமுடன்...................
« Last Edit: September 25, 2016, 03:45:47 PM by JEE »
with kind regard,

G'vakumar.

சர்க்கரை திருவிழா
கை பை பொத்தலால்
சாலையில் சிந்தியது
நூறுகிராம் சர்க்கரை


கண்டதெண்ணவொ
கட்டெரும்புத்தான்
உண்ண போகுதாம்
உற்றார் உறவோடு

கேட்டேன் எறும்பிடம்
ஏய்! உன் சுயநலம் எங்கே?
கேட்டது என்னிடம்?
மனிதனா நான்?

திமிரா உனக்கு - என
கையில் எடுத்தேன்
காலை சுற்றியது
அதன் சுற்றமும் நட்பும்

வெட்டினால் கூட
வராதவன் மனிதன்
வெறும் எறும்புக்கு
எப்படி இனபற்று

சூடும் சுரணையும்
உப்பு கூட சாப்பிடுவதில்லை.?
புயலோ பெருமழையோ?
புண்படுத்தாத வாழ்வெப்படி?

இயற்க்கை மீண்டும் மனமகிழ
மனிதனை அறவே அழித்துவிடு
மறுபிறப்பேதும் எனக்கிருந்தால்
மண்ணில் எறும்பாய் படைத்துவிடு


சக்தி ராகவா






Offline KaBiLaN

  • Jr. Member
  • *
  • Posts: 73
  • Total likes: 291
  • Total likes: 291
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நேசிப்போரை வெறுக்காதே! நம்பியோரை ஏமாற்றாதே!!.
ஒரு படத்தை போட்டு மிஸ்டரி(Mystery) சென்றார் !
ஓவியத்துக்கு உயிர் கொடுங்கள் என்றார் !!
ஒருநாள் கூட செல்லவில்லை...
ஆறு பிரம்மாக்கள் உயிர் கொடுத்தனர்
ஆறு கால் எறும்புகளுக்கு !.....
எறும்பை போல ரொம்பத்தான்
எழுத்தில் சுறுசுறுப்பு  அவர்களுக்கு !!

சாறுள்ள சிவந்த செம்புற்று பழத்தை
சத்தமின்றி சாப்பிடும் எறும்புகள் !....
ஒற்றுமையாய் சேர்ந்து உண்ணுவதால்
ஒவ்வொன்றின் முகத்திலும் தெரிகிறது
மகிழ்ச்சி அரும்புகள் !!
உண்ணப்படும் பழமோ செம்புற்று..
உண்ணும் எறும்புகள் வந்தது மண்புற்று...
உறவாய் சேர்ந்து உண்ணுகின்றன இன்புற்று...

சிற்றின்ப ஆர்வம் கொண்ட மானிடனுக்கு
சிவந்திருப்பதால் அழகு காதலியின்
செவ்விதழை தீண்ட தோன்றும்...
சிவந்து காணுவதால் எழில் காதலியின்
செம்மேனியினை தழுவ தோன்றும்.....
அதுபோல் இங்கே - சிவந்து
அழகாய் தோன்றுவதால் பழத்தை அனைவரும் 
ஆர்வமாய் உண்ண வந்தீரோ எறும்புகளே?!......

சமூக ஒற்றுமை எண்ணமுள்ள மானிடனுக்கு
சகமனிதனோடு சேர்ந்து வாழ தோன்றும்......
அனைவருக்கும் பகிர்ந்தே அன்போடு கலந்து
அன்னம் உண்ணவும் தோன்றும்....
அதுபோல  ஒரு பழத்தை
ஒன்றாக சேர்ந்துண்ண இங்கே
ஒற்றுமையாய் வந்தீரோ எறும்புகளே ? ! .........

சிற்றின்ப காதலோ சீர்மிகு ஒற்றுமையோ
போகட்டும் விடுங்கள் - பூச்சியினத்தில்
புகழ் பெற்ற எறும்புகளே .....

சிறு தீவிபத்தோ..சீரழிக்கும் வெள்ளப்பெருக்கோ......
சின்னாபின்னமாவது நீங்கள்தானே...
கண்ணில்பட்ட பொருளை கரம்பற்றி
கரையேறி வேறிடம் போனாலும்
கடுமையான உழைப்பில் முன்னேறும்
நீங்களும் ஒருவகையில்
புலம் பெயர்ந்து வாழும் அகதிகளே........

பத்துகோடி ஆண்டாய் வாழும் இனத்திலும்
பண்பது மாறாமல், மேடுபள்ளமது பாராமல்
ஒற்றுமையோடு உழைப்பை கற்றுகொடுத்து
ஐம்பது மடங்கு எடைசுமந்து ஆச்சர்யமூட்டும்,
நீங்களெல்லாம் ஒருவகையில் மனிதனுக்கு
ஐந்து சென்டிமீட்டர் அளவுள்ள ஆசிரியர்களே !......

கிட்டங்கி இல்லை..கிளை வங்கியும்  இல்லை..
ஆனாலும் வாழ்வதற்கு அதிகம் சேமிப்பதும்......
ஆயுள் குறைவிலும் அலைந்து உழைக்கும்
ஆற்றல் அதிகம் காமிப்பதும் நீங்களே !........
ராணி,வேலையாள்,காவலாளி என்ற
ரம்மியமான ராஜாங்கமும்  உம்முடையதே.....

ஒழுங்குபடுத்த ஆளில்லை எனினும்
வேதிப்பொருளால் வரிசைகாட்டும் விஞ்ஞானிகளே!!
உதயசூரியனின் ஒளியில் உலர்த்தி
தானியம் ஈரமாவதை தடுக்கும்
வேளாண்மை வழிகாட்டிகளே !.....

சிவந்தரத்தம் கொண்ட மனிதன் ஒற்றுமையின்றி
சிதறி போயி கொண்டிருக்க
நிறமற்ற ரத்தம் கொண்டாலும் நீங்கள்
நிலத்தில் ஒன்றாய் வாழ்கிறீர்களே !
நுண்ணுயிராய் இருந்து பூமியினை வளமாக்கி
நுரையீரலின்றி தோல் வழி சுவாசித்து
மண்ணினை தோழமையுடன் ஆள்கிறீர்களே !!

எறும்பு ஊற கல்லும் தேயுமாம் ! இன்னும்
எண்ணத்தில் உள்ளதை எல்லாம் எழுதினால்
படிக்கும் கண்களும் இங்கே ஓயுமாம் !!....
நிறுத்திக்கொள்கிறேன் எறும்புகளே ..

இன்னும் பல எறும்புகளை கூப்பிடுங்கள் !
செம்புற்று பழத்தை மகிழ்வோடு சாப்பிடுங்கள் !!...
உங்களை பார்த்து நல்ல பழக்கத்தை
மனிதர் நாங்கள் கற்று கொள்கிறோம் !...
சந்தோச வாழ்வை பெற்று கொள்கிறோம் !!

Offline SweeTie

யானையைக் கதற வைப்போம்
சிங்கத்தை அலறவைப்போம்
புலிகளும் வெருண்டோடும்
சிற்றெறும்பு பேர் கேட்டால்

சக்கரைப் பொங்கலில்  கால்
சறுக்கி விழுந்தாலும்
ஒன்றாகவே வீழும்
கூட்டுக் குடும்பம் நாம்

இலைகளில் கூடு செய்வோம் 
மரங்களில்  வீடமைப்போம்   
மலைகளிலும் வாழ்ந்திடுவோம்
பூமியிலும் ஆட்சி செய்வோம்

வசந்தத்தில்  காதல்  செய்வோம் 
தென்றல் காற்றிலே பறந்திடுவோம்
அழகான  எம் குலத்து ராணிகளுடன்
கைகோர்த்து  நடனமாடி .

செஞ்சிவப்பு   பழங்கள்  எமக்கு
தின்னத்  தின்ன  ருசிக்கும்
செஞ்சிவப்பு பெண்கள்
ஆடவர் கண்களை   மயக்கும் 

வேலையென்று  வந்துவிடடால்
வெள்ளைக்காரன் தோற்றுப்போவான்
அனைவரும் திரண்டு சென்று   
விரயமாய்  முடித்திடுவோம்

தனக்காகவே மட்டும் வாழும்
மனிதன்  சுயநலவாதி 
இனத்துக்காகவே உழைக்கும்
நாம் கடின உழைப்பாளிகள்

கூட்டாகவே வாழ்கிறோம்
இரவு பகல் அயராமல் உழைக்கிறோம்
சிறுகச்  சிறுக சேர்க்கிறோம்
பெருவாழ்வு வாழ்கிறோம் .
 
 
« Last Edit: September 28, 2016, 06:06:19 AM by SweeTie »

Offline JerrY

எறும்பு ( பகிர்ந்து உண்ணல் ) ..

ஏழ்மையின் அரிச்சுவட்டோடு ..
அஃதையாய் இங்கு பலருண்டு

வியப்பின் உலகம்
விதையாய் மாற ..
விடியலின் விழிப்போடு ..
பசி எனும் படம் எடுத்து பலர்இங்கு ..

கொடுத்து விடு ..
   கொஞ்சுண்டேனும் உணவயும்

எறும்புகளை பார் இந்த
பார் போற்றும் உழைப்பை ..

ஒன்றாய் சேர்ந்து , ஓடி உழைத்து
ஒருகை உணவயும் , கூட்டாய் பிரித்து ..
அரைவயிற்று கஞ்சியை
அழகாய் பகிர்ந்து ..

தன் தேவைக்கு , தானே இணைந்து .. தன் இனம்
இத்தரனியின் சேமிப்பு கிடங்காய்

உலகிற்க்கு காட்டும் எறும்புகளுக்க ,, உணர்வுடே நன்றிகள் ..

இவன் ..

இரா.ஜகதீஷ் ..

Offline DaffoDillieS

நிற்காமல் ஓடும் சின்னச்சின்ன எறும்புகள்..
கற்றுத்தரும் வாழ்க்கைப் பாடங்கள்..
கூடி வாழ்ந்தால் கோடி நன்மைகள்..
பகிர்ந்து உண்டால் ஏது பசிக்கும் வயிறுகள்..!!

எண்ணம் செயலில் வேற்றுமை..
தாராது ஒற்றுமை..
நம்மில் வீழின் வேற்றுமை..
ஓங்கும் ஒற்றுமை..

சிறிதளவேனும் பகிர்தல் வேண்டும்..
கூடி உழைக்கும் எறும்புக்களின் குணம் வேண்டும்..
நாடி தேடி ஓடி ..
உணவைச் சேகரிக்கும் சின்ன உயிர்கள்..
நமக்குப் பெரிய எடுத்துக்காட்டுகள்..

சோதனைகள் வரின்..
கூடிச் சமாளிப்போம்..
சாதனைகள் புரின்..
ஓடிச்சென்று பாராட்டுவோம்..
வேதனைகள் தரும் வாழ்க்கையைப் போராடி வெல்வோம்..!
என்று  ஐந்தறிவு கொண்ட எறும்புகள் உணர்த்துவதை..
நமக்கு நின்று யோசிக்க நேரமில்லை..
யோசித்ததை ஆராய வழியில்லை..

அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிதென்பார்..
மானிடராய்ப் பிறத்தல் மட்டும் போதாதென்பேன் நான்..!!!!

« Last Edit: September 28, 2016, 07:14:04 PM by DaffoDillieS »