Author Topic: ~ சளியை போக்கும் எளிய இயற்கை வழிமுறைகள் ~  (Read 634 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226689
  • Total likes: 29016
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
சளியை போக்கும் எளிய இயற்கை வழிமுறைகள்

ஜலதோஷம் வரும் பொழுது நமக்கு முதலில் வந்து தொல்லை கொடுப்பது சளி . மிகவும் அருவருப்பாக நாம் நினைக்கும் இந்த சளிதான் நம்மை கிருமிகளின் பாதிப்பில் இருந்து பாதுகாக்கிறது .பொதுவாக ஜலதோஷம் வருவது வைரஸ் பாக்டீரியா பூஞ்சை தூசி தொல்லையால். நம் உடல் ஆரோக்கியமாக இருக்க பல செயல்கள் நம்மை அறியாமல் நடந்து கொண்டிருக்கிறது . அதில் முக்கியமான ஒன்று சளி . சளி நம் உடலை பாதுகாக்கும் ஒன்று என்றால் நம்மால் நம்ப முடியாது. ஆனால் அதுதான் உண்மை
நாம் சுவாசிக்கும் பொழுது நம் மூக்கின் வழியாக கண்ணுக்கு தெரியாத வைரஸ் , பாக்டீரியா கிருமிகள் கண்ணுக்கு தெரியாத பூஞ்சைகள் தூசிகள் போன்றவை நம் மூக்கு வழியாக உள்ளே செல்கிறது அப்படி செல்லும் பொழுது அதை தடுக்கும் ஒரு எதிர் விளைவே சளி ஆகும்

வைரஸ் , பாக்டீரியா கிருமிகள் கண்ணுக்கு தெரியாத பூஞ்சைகள் தூசிகள் போன்றவை நம் மூக்கு வழியாக உள்ளே செல்லும் பொழுது நம் உடம்பில் உள்ள நோய்யெதிர்ப்பு உயிரணுக்கள் ஹிஸ்டமைன் என்ற வேதிப்பொருளை சுரக்கிறது . இந்த ஹிஸ்டமைன் ஆனது உடனே தும்மல், அரிப்பு போன்ற உணர்வை தூண்டி விடுகிறது உடனே சளியை உற்பத்தி செய்யும் திசுக்கள் சளியை அதிகமாக உற்பத்தி செய்கிறது.
நோய்த்தொற்று ஏற்படும் பொழுது நமக்கு உணர்த்தவே சளி ஏற்படுகிறது
சளி வந்தவுடன் நோய்த்தொற்றை கண்டுபிடித்து அதற்கு மருந்து சாப்பிட்டால் நோய் தொற்று மறைந்து சளி போய்விடும்