Author Topic: ~ சோயா சங்க்ஸ் ரைஸ் ~  (Read 365 times)

Offline MysteRy

~ சோயா சங்க்ஸ் ரைஸ் ~
« on: September 20, 2016, 09:53:42 AM »
சோயா சங்க்ஸ் ரைஸ்



தேவையானவை:

பச்சரிசி – 2 கப், சோயா சங்க்ஸ் (சோயா உருண்டைகள்) – 12 முதல் 15 வரை, பெரிய வெங்காயம் – 2, இஞ்சி – பூண்டு விழுது – 2 டீஸ்பூன், பச்சை மிளகாய் – 2, மிளகாய்த்தூள் – 3 டீஸ்பூன், தயிர் – அரை கப், கரம் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன், சீரகம் – அரை டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை – சிறிதளவு, எண்ணெய், நெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

வெங்காயத்தை நீளநீளமாக, மெல்லியதாக நறுக்கவும். சோயா சங்க்ஸை சுடுநீரில் 5 நிமிடம் போட்டு எடுத்து, பிறகு பிழிந்து குளிர்ந்த நீரில் 2,3 முறை அலசி நீரை ஒட்டப் பிழியவும். பிரஷர் பேன் (pressure pan) அல்லது சின்ன குக்கரில் எண்ணெய், நெய் விட்டு… காய்ந்ததும் சீரகம் தாளித்து, நறுக்கிய வெங்காயம், கீறிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பிறகு, இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து மேலும் வதக்கவும்.
இதனுடன் உப்பு, தயிர், மிளகாய்த்தூள், கரம்மசாலாத்தூள், பிழிந்து வைத்த சோயா சேர்த்து நன்கு வதக்கி… அரிசி,4 கப் தண்ணீர் சேர்த்து பேனை (அல்லது குக்கரை) மூடவும். 2 விசில் வந்ததும் அடுப்பை `சிம்’மில் வைத்து 5 நிமிடம் கழித்து இறக்கவும். நறுக்கிய கொத்தமல்லித்தழையைத் தூவவும். ஆவி பறக்க ஆனியன் ராய்த்தாவோடு பரிமாறவும்.