Author Topic: வறண்டு போவது காவிரி மட்டுமல்ல..  (Read 815 times)

Offline KaBiLaN

  • Jr. Member
  • *
  • Posts: 73
  • Total likes: 291
  • Total likes: 291
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நேசிப்போரை வெறுக்காதே! நம்பியோரை ஏமாற்றாதே!!.
வணக்கம் கடந்த சில  பல நாட்களாக காவிரி தண்ணீரின் உரிமைக்காக நம்ம தமிழக விவசாயிகள் போராடிக்கிட்டு இருக்குறாங்க .. பக்கத்து மாநிலம் கருநாடகம் தண்ணீர் கொடுக்க மாட்டோம் னு போராடிகிட்டு இருக்குறாங்க..கண்டிப்பா இது செய்தித்தாள் வாயிலாக எல்லோருக்கும் தெரிஞ்சு இருக்கும். இந்த போராட்டத்தை கவனிச்சு பார்த்தா ஒரு உண்மை தெரியும் பக்கத்து மாநில மக்கள் அவங்க உரிமைக்காக ஒன்றாய் கூடி போராடுனாங்க..சாதி மதம் ஏற்றத்தாழ்வு னு இல்லாம எல்லாம் ஒன்றாய் இணைஞ்சு மாநிலமே திரண்டு  போராடுனாங்க... ஆனால் நம்ம தமிழ்நாட்ல நிலைமை வேற..இங்க விவசாயிங்க மட்டும் போராடிகிட்டு இருக்குறாங்க ..நெறய பேரு இந்த வாழ்வாதார பிரச்சனையை பத்தி கண்டுக்காம போறத கண்கூடா பாக்கமுடியுது..தமிழருக்குள்ள ஒற்றுமை இல்லையேன்னு ஒரு வருத்தத்துல வந்ததுதான் " காய்ந்து போவது காவிரி ஆறு  மட்டுமல்ல"  என்ற என்னோட  இந்த கவிதை..

காதலிக்காக  ஆயிரம்
கவிதைகள் எழுதுபவர்
எல்லாம் ஏனோ - வறண்ட
காவிரிக்காக  ஒன்றும்
எழுதவில்லையே !

"காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்ளுவோம்.”
பாரதி சொன்னான்...- இன்று
காவிரி வெற்றிடமாய் மாறி விட்டதே !..
"வண்ணம் பாடியே நடக்கும் காவிரி"
பாரதிதாசன் சொன்னான் - இன்று
வளமின்றி  காவிரி
வறுமையுடலுடன் படுத்துவிட்டதே !!.....

கருகும் பயிருக்காய்
கண்ணீர் வடிக்கும் விவசாயினை 
கண்டுணர மனமில்லை.....
கபாலி பட நான்கு காட்சிகளை
கண்டு அலைகிறானே தமிழன் !...

காய்ந்து போன நிலத்தை எண்ணியெண்ணி
ஓய்ந்து போகிறான் நம் விவசாயி - நடிக
கட் அவுட்டுக்கு பாலூற்ற கூடும் கூட்டம் கூட
கடைமடை விவசாயிக்கு வருவதில்லையே.....

வேற்றுமொழி  பேசும் மாநில ஒற்றுமை - அமுது
 ஊற்றாய் இனிக்கும் தமிழ் பேசும்
நம் தமிழனிடம் இல்லையே  !...
திராவிடம் பேசி மெல்ல பிரிப்பதும்
தமிழக அரசியலின் ஒரு தொல்லையே !!

அறவழியோ ஆக்ரோசமோ போராட்டமெனில்
அரசியல்வாதியும்  அடித்தட்டு மக்களும்
ஒன்றாய்  சேர்வது அண்டை மாநிலம் !......
சாதியிலும் மதத்தாலும் கட்சியாலும்
அடித்து கொண்டு பிரிந்து போவது
நம் அழகு தமிழ்மாநிலம் !!.....

எத்தனை கோடி தமிழ் மக்கள்
எங்கெங்கோ  இருந்தென்ன பயன்? - 
ஒற்றுமை இன்றி 
ஈழத்தின்  நிலத்தை விட்டோம் -கச்சத்தீவை
கயவருக்கு கொடுத்தோம் அன்று !.....
காவிரி, முல்லை , பாலாறு கூட
கரம்நழுவி செல்லும் நிலையில் இன்று !! ...

சரித்திரத்தில் பெற்ற பெருமை  - தமிழ்
சந்ததி வாழும் வரை தழைக்க வேண்டும்....
இதற்கு நல்லொற்றுமை தமிழருக்குள்
நிலைக்கவேண்டும் - இல்லையெனில்
வற்றிகாய்ந்து போவது காவிரிஆறுகள் மட்டுமல்ல
தமிழினத்தின் வளர்ச்சி பெருமையும்தான்.....
                          - கபிலன் FTC




Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4584
  • Total likes: 5309
  • Total likes: 5309
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’

அருமையான அவசியமான
  கவிதை தோழா....!!!!
உண்மையை உணர்த்தியுள்ளீர் தோழா ....!!!

 ''காதலிக்காக  ஆயிரம்
கவிதைகள் எழுதுபவர்
எல்லாம் ஏனோ - வறண்ட
காவிரிக்காக  ஒன்றும்
எழுதவில்லையே ! ''
இக்கூற்றை  நான் ஏற்கிறேன் தோழா....

காதல் கவிதை எழுத தெரிந்த எமக்கு
வறண்டு போகும் காவிரியைப் பற்றி
எழுத தோன்றவில்லை எண்ணமும் வரவில்லை ...!!!
வருந்துகிறேன் தோழா....

தோழரின் காணொளி மூலம்
இக்கவிதை உலகெங்கும் பரவவேண்டும் ....
ஒவ்வொரு மனிதனும் படிக்க வேண்டும் ...
தவற்றை உணர வேண்டும் ...
திருந்த வேண்டுமென்று ஆசைக் கொள்கிறேன் ....

மிக்க நன்றி கபி....
கவிஞனின் கவிதை பயணம்
முற்றுப்புள்ளியின்றி தொடரட்டும் .....
வாழ்த்துக்கள் தோழா .....!!!!

நான் தங்கள் கவிதையின்
 ரசிகை .....
~ !!... ரித்திகா ...!! ~

Offline LoLiTa

Tozhare,  anaithu tamilargal pake vendiye video idhu. kavidhai and d way u present is just wow.

Offline Maran



மிக அருமையான வரிகள்... கபிலன் நண்பா!!

திராவிடன்
காவிரி தரமாட்டான்
பாலாறு தரமாட்டான்
முல்லை பெரியாறு தரமாட்டான்
ஆனால்,
தன்மானத் தமிழன்
நாட்டையே ஆள தருவான்!

என்னைக்கு நடிக்க வந்தவனுங்க கிட்ட நாட்டைக் கொடுத்தானுகளோ அன்றைக்கே நீர்த்து போய்விட்டது காவிரி விவகாரம்.

என்ன செய்ய கபிலன் நண்பா?!! திராவிடத்தை பேசி, பின்பற்றி, ஆளவிட்டுவிட்டு, அண்டை திராவிட மாநிலங்களிடம் குடிநீருக்கே பிச்சை எடுக்கிறான் தமிழன்.

தமிழர்களின் ஒற்றுமை இன்மையே, கண்டவன், நின்றவன் எல்லாம் பதம் பார்க்க வசதியாக இருக்கிறது. நாதியற்ற  இனம், தெற்கில் மீன் பிடிக்கப் போனால் சிங்களவனிடம் அடி, வடக்கில் கர்நாடகம்....

நதி நீர் பொதுவானது... கர்நாடகம், காவிரி வரும் வழியில் சகட்டு மேனிக்கு அணை கட்டத் தொடங்கும் போதே அதனை கண்டித்து நடவடிக்கை எடுத்திருந்தால் இன்று நிலைமை இவ்வளவு மோசமாக போயிருக்காது.

இதற்கு மேல் பேசினால், மாறன் தீவிர அரசியல் பேசுகிறான் என்று இந்த பதிவையே தூக்கிடுவாங்க FTC Admin..!

இத்தளத்தில் அரசியல் பதிவு செய்ய கூடாது என்று சொன்னதால் நான் இப்பிரச்சனையை இங்கு கொண்டுவரவில்லை.



« Last Edit: September 13, 2016, 06:29:24 AM by Maran »

Offline MysteRy


Offline LoShiNi


Offline KaBiLaN

  • Jr. Member
  • *
  • Posts: 73
  • Total likes: 291
  • Total likes: 291
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நேசிப்போரை வெறுக்காதே! நம்பியோரை ஏமாற்றாதே!!.