Author Topic: மத்தாப்பு  (Read 448 times)

Offline thamilan

மத்தாப்பு
« on: September 02, 2016, 08:52:51 PM »
     
அம்மாவின் கைகள்
அன்பைக் காட்டும்
அப்பாவின் கைகள்
வாழ்க்கையைக் காட்டும்
நண்பனின் கைகள்
பிகரைக் காட்டும்
பிகரின் கைகள்
டாட்டா காட்டும்


ஆடிக்குப் பின்னால்
ஆவணி
தாடிக்குப் பின்னால்
தாவணி


காற்றுக்கு என்மேல் கோபம்
காரணம் கேட்டேன்
சுவாசிப்பது என்னை
காதலிப்பது மட்டும் அவளையா
எனக் கேட்டது


காதலின் கண் அசைவுக்கு
ஆயிரம் அர்த்தங்ககள்
நண்பனின் கண் அசைவுக்கு
ஒரே ஒரு அர்த்தம் தான்
"மச்சான் பிகர் வருது சட்டுனு
திரும்பிப் பார்
"
 

இறைவனிடம் புன்னகையாக் கொடு
என்று கேட்டேன்
கண்ணீரைக் கொடுத்தான்
இன்பத்தைக் கொடு என்று கேட்டேன்
துன்பத்தைக் கொடுத்தான்
மரணத்தைக் கேட்டேன்
உன்னைக் கொடுத்தான் 

 


Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4584
  • Total likes: 5309
  • Total likes: 5309
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: மத்தாப்பு
« Reply #1 on: September 03, 2016, 10:50:56 AM »
வணக்கம் தோழா ....
  '' மத்தாப்பு '' கவிதை
      மதப்பைப்போலவே பட படவென
         வெடிக்கின்றது ......
            வாழ்த்துக்கள் ......
              நன்றி தோழரே ....!!!
  அழகான கவிதையைப் பகிர்ந்ததற்கு  ...!!!!