Author Topic: ~ முந்திரி கேக் ~  (Read 380 times)

Online MysteRy

~ முந்திரி கேக் ~
« on: August 31, 2016, 10:02:25 PM »
முந்திரி கேக்



தேவையானவை:

முந்திரிப் பருப்பு – 2 கப்
சர்க்கரை – 2 கப்
ஏலக்காய் தூள் – 1 ஸ்பூன்
நெய் – 50 கிராம்

செய்முறை:

முந்திரிப் பருப்பை வாணலியில் நெய் விட்டு, நன்கு பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். சற்று ஆறியதும் மிக்ஸியில் சிறிது கரகரப்பாக அரைத்து கொள்ளவும்
அடுப்பில் வாணலியை வைத்து சர்க்கரை, ஒரு கப் தண்ணீர் சேர்த்து ஒரு கம்பி பதத்திற்கு பாகு காய்ச்சவும்.
பதம் சரியாக வந்தவுடன் அரைத்த முந்திரியை சிறிது சிறிதாக கொட்டி கிளற வேண்டும். சிறிது நெய் சேர்த்து கை விடாமல் கிளறி கொண்டே இருக்க வேண்டும்.· கெட்டியாக இருக்கும் பொழுது எடுத்து, நெய் தடவிய தட்டில் கொட்டி ஆறியதும் வில்லைகளாக போடவும்.