Author Topic: ~ மாலை நேர ஸ்நாக்ஸ் ரவை போண்டா ~  (Read 479 times)

Offline MysteRy

மாலை நேர ஸ்நாக்ஸ் ரவை போண்டா



தேவையான பொருட்கள் :

வெள்ளை ரவை – 100 கிராம்
அரிசி மாவு – 50 கிராம்
கெட்டித் தயிர் – 200 கிராம்
துருவிய தேங்காய் – 1/2 கப்
பச்சை மிளகாய் – 1
பெரிய வெங்காயம் – 1
கறிவேப்பிலை – சிறிது
பெருங்காயத்தூள் – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
இஞ்சி – சிறிது

செய்முறை :

* வெங்காயம், ப.மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, ரவை மற்றும் தயிரை ஊற்றி நன்கு கலந்துக் கொள்ளவும். பின்னர், அதில் பொடியாக நறுக்கி வெங்காயம், ப.மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, உப்பு, பெருங்காயத்தூள், துருவிய தேங்காய் அனைத்தையும் சேர்த்து நன்கு பிரட்டி அதனை ஒரு 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அந்த கலவையை முதலில் பிரட்டும் பொழுது தண்ணீர் கூடுதலாக இருக்கும். ஆனால், 15 நிமிடம் ஊறிய பிறகு ரவை தயிரில் ஊறி சற்று பெரிதாகும். பின்னர், தண்ணீர் சரியாக இருக்கும்.
* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் 15 நிமிடம் ஊறிய மாவை சிறிது எடுத்து உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
* சுவையான ரவை போண்டா தயார்.
* இதற்கு வேர்க்கடலை சட்டி, தேங்காய் சட்னி சுவையாக இருக்கும்.
* அரிசி மாவிற்கு பதிலாக இட்லி மாவையும் பயன்படுத்தலாம்.