Author Topic: ~ ” ஜில் ஜில் சீரகம்” ~  (Read 329 times)

Offline MysteRy

~ ” ஜில் ஜில் சீரகம்” ~
« on: August 31, 2016, 09:19:57 PM »
” ஜில் ஜில் சீரகம்”



தேவையானவை:

சீரகம் 1/2 கப்
தேங்காய் பால் 1 கப்
வெல்லம் பொடித்தது 1/2 கப்
ஏலக்காய் தூள் 1 தேக்கரண்டி

செய்முறை:

சீரகத்தை தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைக்கவேண்டும்.
ஊறிய பின் வடிகட்டி நைசாக சிறிது தண்ணீர் சேர்த்து அரைக்கவேண்டும்.
வெல்லத்தை பொடி செய்து ஒருகப் தண்ணீரில் கரைக்கவும்.வடிகட்டவும்.
ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் அரைத்த சீரக விழுது வடிகட்டிய வெல்லக்கரைசல்,தேங்காய் பால்,ஏலத்தூள் எல்லாவற்றையும் சேர்த்து நன்கு கலக்கவும்.
Fridge ல் ஒரு மணி நேரம் வைத்து குடிக்கலாம்.
‘ஜில் ஜில் சீரகம்’ கோடையில் உடலை குளிர்விக்கும்.
இரவில் அருந்தினால் நல்ல தூக்கம் வரும்.