Author Topic: ~ கறி ஊறுகாய் ~  (Read 326 times)

Offline MysteRy

~ கறி ஊறுகாய் ~
« on: August 29, 2016, 09:08:37 PM »
கறி ஊறுகாய்



1 1/4 கிலோ எலும்பு இல்லாத கறியைச் சுத்தம் செய்து சிறுத் துண்டுகளாக்கிக் கொள்ளவும். 1/4 கிலோ சின்ன வெங்காயம், 1/4 கிலோ இஞ்சி, 60 கிராம் பூண்டு, 15 கிராம் கிராம்பு, 15 கிராம் சிரகம், 15 கிராம் ஏலக்காய், 60 கிராம் உப்பு, 30 கிராம் சிகப்பு மிளகாய், 1/4 தேக்கரண்டி ஜாதிபத்திரி, 1/4 தேக்கரண்டி ஜாதிக்காய் – இவற்றை அரைத்துக் கொள்ளவும். வாணலியில் 2 கப் இதயம் நல்லெண்ணெய் ஊற்றிக் காய வைத்து,

அரைத்த மசாலா பொருட்கள் அனைத்தையும் இத்துடன் சேர்த்து நன்கு சிவக்க வதக்கி, இறக்கி வைத்துக் கொள்ளவும். அடிகனமானப் பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் துண்டுகளாக்கியக் கறியைப் போடவும். அது விடும் தண்ணீரிலேயே கறியை கிளறி, தண்ணீர் நன்றாக வற்றியப் பின் இறக்கவும். வதக்கி வைத்துள்ள மசாலாவுடன் இக்கறித் துண்டுகளைப் போட்டு, 1 கப் வினிகரை ஊற்றி, மிதமான தீயில் ஐந்து நிமிடங்கள் கிளறி இறக்கவும். பின், மீண்டும் 1/2 கப் வினிகர் ஊற்றி, இத்துடன் மாங்காய் பௌடர் 30 கிராம் சேர்த்து நன்கு கிளறவும். ஆறிய பின் சுத்தமான பாட்டில்களில் அடைத்து, மூடி வைத்து ஏழு நாட்களுக்குப் பின் உபயோகிக்கவும்.