Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
click here enter chat Room
www.friendstamilchat.net
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
Special Category
»
மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty
»
~ கருணைகிழங்கின் பயன்கள் ~
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: ~ கருணைகிழங்கின் பயன்கள் ~ (Read 411 times)
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 226706
Total likes: 29016
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
~ கருணைகிழங்கின் பயன்கள் ~
«
on:
August 29, 2016, 08:54:39 PM »
கருணைகிழங்கின் பயன்கள்
கருணைகிழங்கில் விட்டமின்-C, விட்டமின் B, மாங்கனீஸ், மினரல்ஸ், ரிபோபிளேவின், பொட்டாசியம், இரும்புச்சத்து போன்ற சத்துக்கள் நிறைந்துக் காணப்படுகிறது.
இந்த கிழங்கை நாம் மற்ற கிழங்கை போன்று சாதாரணமாக சாப்பிட முடியாது, ஏனென்றால் இது நாக்கில் நமைச்சலை ஏற்படுத்தும்.
எனவே இக்கிழங்கை நன்றாக வேகவைத்து தோல் உரித்து புளி சேர்த்து சமைத்து சாப்பிடலாம்.
பயன்கள் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலி மற்றும் மாதவிடாய் ஏற்படுவதில் பிரச்சனை போன்றவற்றை சீராக்கும். கருணைக்கிழங்கு சாப்பிடுவதால் கபம், வாதம் ஆகியவற்றை குணப்படுத்துகின்றது. மேலும் கருணைக்கிழங்கு பசியைத் தூண்டி இரைப்பைக்கு பலம் சேர்ப்பதில் பயனுள்ளதாக உள்ளது. மூல நோயை குணப்படுத்தி, ஆசன வாயிலில் உள்ள முளைகளைச் சிறுது சிறிதாக கரைத்து மூலத்தை அடியோடு குணமாக்குகிறது. உடல் எடையை குறைக்க விரும்புவோர்கள் இந்த கருணைக்கிழங்கை தினமும் சாப்பாட்டிற்கு பதில் உணவாக உட்கொண்டால் நல்ல பலனைக் காணலாம். கருணைக்கிழங்கு பித்தப்பை பிரச்சனை, எலும்புகள் பலவீனம் போன்ற பிரச்சனைகளைத் தீர்க்கின்றது. பெண்களின் கர்ப்பக் காலங்களில் கருத்தரிதலின் போது ஏற்படும் பிரச்சனைக்கு உகந்ததாக கருணைக்கிழங்கு உள்ளது.குறிப்பு
மார்பக புற்றுநோய், கருப்பை புற்றுநோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இதனை தவிர்ப்பது நல்லது.
ஏனெனில் இந்த நோயின் தாக்கத்தை ஏற்படுத்து ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் வெளிப்பாடு மோசமாக இருக்கும்
கருணைக்கிழங்கு புளிக்குழம்பு
கருணைக்கிழங்கு – 10 (வேக வைத்தது),
சின்ன வெங்காயம் – 10,
தக்காளி – 1 (நறுக்கியது),
பூண்டு – 10 பற்கள்,
பச்சை மிளகாய் – 2,
மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்,
மல்லித் தூள் – 1 டேபிள் ஸ்பூன்,
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு,
சர்க்கரை – 1 டீஸ்பூன்,
புளிச்சாறு – 2 டேபிள் ஸ்பூன்,
அரிசி மாவு – 2 டேபிள் ஸ்பூன்.
தாளிப்பதற்கு…
எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்,
கடுகு – 1 டீஸ்பூன்,
சீரகம் – 1 டீஸ்பூன்,
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்,
பெருங்காயத் தூள் – 1/4 டீஸ்பூன்,
கறிவேப்பிலை – சிறிது.
எப்படிச் செய்வது?
முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அதில் கருணைக்கிழங்கை சேர்த்து மூடி வைத்து 15-20 நிமிடம் வேக வைக்க வேண்டும். பின்னர் அதனை இறக்கி, நீரை வடிகட்டி விட்டு தோலுரித்து, கருணைக்கிழங்கை மீண்டும் அதே பாத்திரத்தில் போட்டு, சுத்தமான நீரை ஊற்றி, அதில் சிறிது புளிச்சாறு சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.
பிறகு அதில் சின்ன வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து சிறிது நேரம் வதக்கி, பின் தக்காளியை சேர்த்து 3 நிமிடம் நன்கு மென்மையாகும் வரை வதக்கி விட வேண்டும். பின் அதில் மசாலா பொருட்களான மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள் சேர்த்து 30 நொடிகள் கிளறி, பின் அதில் சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும். பின்பு அதில் சர்க்கரை, உப்பு சேர்த்து கிளறி, புளிச்சாறு சேர்த்து பின் வேக வைத்துள்ள கருணைக்கிழங்கையும் சேர்த்து பிரட்டி 10 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும். இறுதியில் அதில் அரிசி மாவை 1/4 கப் நீரில் கலந்து ஊற்றி, 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கினால், கருணைக்கிழங்கு புளிக்குழம்பு ரெடி!!!
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
Special Category
»
மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty
»
~ கருணைகிழங்கின் பயன்கள் ~