Author Topic: ~ பாசிபயறு குழம்பு (கொங்குநாடு ஸ்பெஷல்) ~  (Read 486 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227430
  • Total likes: 29057
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
பாசிபயறு குழம்பு (கொங்குநாடு ஸ்பெஷல்)



தேவையான பொருட்கள்:

பாசிபயறு 1 கப்
வெங்காயம் பாதி
தக்காளி சின்னது 1
பச்சை மிளகாய் 5
கறிவேப்பில்லை சிறிது
தனியா 1 டீஸ்பூன்
சீரகம் 1 டீஸ்பூன்
பூண்டு 2 பல்
மஞ்சள்தூள் 1 டீஸ்பூன்
எண்ணெய் 1 கரண்டி
உப்பு தேவையான அளவு.

செய்முறை:

முதலில் பாசிபயற்றை வாசனை வரும் வரை வறுத்து கொள்ளவும் .
பின்பு கழுவி தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.
முக்கால் பதம் வெந்தவுடன் தக்காளி,உப்பு ,மஞ்சள்தூள் சேர்த்து நன்கு கலந்து மறுபடியும் மூடி வைத்து வேக விடவும்.
பருப்பு வெந்தவுடன் தனியாக ஒரு பாத்திரத்தில் , வெங்காயம் ,பச்சைமிளகாய்,கறிவேப்பில்லை,தனியா,சீரகம் (இரண்டையும் கையில் தேய்த்து போடவும் ).
அனைத்தையும் எண்ணெய் ஊற்றி வதக்கவும்.வதங்கின பின் வேக வைத்த பயறையும்சேர்த்து ஒரு கொதி விடவும்.பின்பு பூண்டை நசுக்கி போட்டு பருப்பு கடையும் மத்தில்கடையவும்.
குழம்பு ரெடி.
 
சூடான சாதத்தில் குழம்பை ஊற்றி நெய் போட்டு சாப்பிட்டால் சுவையோ சுவையாக இருக்கும்.

குறிப்பு:

பாசி பயறை குக்கரில் வேக வைக்க கூடாது .தனியாக பாத்திரத்தில் வேக
வைத்தால்தான் சுவையாக இருக்கும்