Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
நண்பர்கள் இணையதள பொதுமன்றம் உங்களை வரவேட்கிறது ,உங்களை பொது மன்றத்தில் இணைத்துக்கொள்ள தொடர்பு கொள்ளவும்,
[email protected]
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
Special Category
»
மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty
»
~ கோடை வெப்பத்தைச் சமாளிக்க கொஞ்சம் டிப்ஸ் ~
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: ~ கோடை வெப்பத்தைச் சமாளிக்க கொஞ்சம் டிப்ஸ் ~ (Read 1899 times)
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 226708
Total likes: 29016
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
~ கோடை வெப்பத்தைச் சமாளிக்க கொஞ்சம் டிப்ஸ் ~
«
on:
August 25, 2016, 08:48:58 PM »
கோடை வெப்பத்தைச் சமாளிக்க கொஞ்சம் டிப்ஸ்
ஒவ்வொரு பருவகால மாற்றமும் நம் உடலில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இது கோடை காலம். நம்மை சுட்டெரிக்கும் தருணம் இது என்று சொல்வது மிகையல்ல. அன்றாட வாழ்வை வியர்வைகளுக்கும், வெப்பத்துக்குமிடையே நடத்திச் செல்லும் நாம் வெயிலைப் பற்றிய ஒரு வித எரிச்சலுடனேயே வெயில் காலத்தை கடக்க நினைக்கிறோம். மேலை நாடுகளில் இதே வெயில் காலம் என்பது வரப்பிரசாதம் போல. பனிப் போர்வைக்குள் கிடக்கும் பூமியை வெயில் வந்து துடைத்துச் செல்லும் அற்புத நிகழ்வாக அவர்கள் அதைப் பார்க்கிறார்கள். வெயில் வந்து விட்டாலே உடலை முழுவதும் போர்த்தி நடக்கும் குளிர் ஆடைகளை உற்சாகமாய்க் கழற்றிவிட்டு நவீன ஆடைகளுக்குத் தாவி விடுகிறார்கள், கடற்கரை விளையாட்டுகள், கடல் குளியல், சுற்றுலாக்கள், விற்பனை வீதிகள் என களை கட்டி விடும்.
ஆனால் முன்னரே சொன்னது போல் நமக்கு வெயில் காலம் என்பது வெறுப்பை மட்டுமே கொடுக்கிறது. காரணம் அதிகப் படியான வெப்பம். அதை சமன் செய்யுமளவுக்கு இல்லாமல் போன வசந்த, குளிர் காலங்கள். வெயில் காலம் அளவுக்கு அதிகமான வெப்பத்துடனேயே வருகிறது. இந்த வெயில் நாட்களில் உடம்பின் வெப்பம் அதிகரிக்கும்போது அது அதிகப்படியான வெப்பத்தை தோலுக்கு அனுப்புகிறது, தோல் சுற்றுப்புறத்திலுள்ள குளிர்காற்றைக் கொண்டு வெப்பத்தைக் குறைக்கிறது. அல்லது வியர்வை மூலமாக வெப்பத்தை வெளியேற்றுகிறது. ஒரு துளி வியர்வை உடம்பிலுள்ள ஒரு லிட்டர் இரத்தத்தைக் குளிர்விக்கிறது என்பது வியப்பூட்டும் செய்தி.
ஆனால் வியர்க்காத வெயில் வீசும் பிரதேசங்களில் உடல் வெப்பத்தை வெளியேற்ற முடியாமல் உள்ளுக்குள்ளேயே தேங்கிவிடுகிறது. இது ஹீட் ஸ்ட்ரோக் எனப்படும் வெப்பத் தாக்குதலுக்கு உடலைத் தள்ளி உயிருக்கே ஆபத்தான நிலைக்கு மனிதனைக் கொண்டு செல்கிறது. வெளியே உள்ள காற்று வியர்வையையும், உடல் வெப்பத்தையும் உறிஞ்சும் தன்மையற்றிருப்பதே இதன் காரணமாகும்.
சிலருக்கு வியர்க்காத உடல் இயல்பிலேயே அமைந்திருக்கும், அல்லது பிற நோய்களின் தாக்கத்தால் வியர்க்காத தன்மையை உடல் பெற்றிருக்கும். அப்படிப்பட்டவர்கள் தினமும் சிறிது நேரம் குளிர் அறைக்குள் இருக்க முடிந்தால் மிகவும் பயனளிக்கும். குறிப்பாக சர்க்கரை நோய், இதய நோய், குறைந்த இரத்த அழுத்தம் உடையோர் போன்றவர்களின் உடல் வெப்பத்தினால் எளிதில் தாக்குதலுக்கு உள்ளாகும்.
சில மருந்து வகைகள் கூட உடலில் வியர்வைத் தன்மையைக் குறைக்கும் என்று மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள். தொடர் மருத்துவக் கண்காணிப்பில் இருப்பவர்கள் தங்கள் மருத்துவரைக் கலந்தாலோசித்து தங்கள் மருந்தின் தன்மையைக் கண்டுணர்தல் நல்லது. பார்கின்ஸன், உயர் இரத்த அழுத்தம், சில ஒவ்வாமை நோய்கள் போன்றவை அவற்றில் சில.
குறிப்பாக நகர்ப்புறங்களில் கிராமப் புறங்களை விட வெப்பம் மிகவும் அதிகமாக இருக்கும். நகர்ப்புறங்களில் வெப்பம் அதிகமாய் இருப்பதற்கு அங்குள்ள மக்கள் தொகையும், தொழிற்கூடங்களும், போக்குவரத்தும் சில முக்கிய காரணங்களாகும். குளிர் சாதனப் பெட்டி வெளிவிடும் வெப்பமும் நகர்ப்புற சுற்றுச் சூழலை வெப்பப்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
நகர்ப்புறங்களில் வெப்பத்தை எதிரொளிக்கும் தன்மையுடைய பொருட்கள் மிகவும் குறைவாகவே இருக்கின்றன. சாலைகள் போன்றவை வெப்பத்தைப் பெருமளவில் கிரகித்துக் கொள்ளும் தன்மை படைத்தவையாக இருப்பதனால் நகருக்கு வெளியே இருக்கும் வெப்பத்தை விட ஐந்து முதல் எட்டு ஃபாரன்கீட் வரை நகருக்குள் வெப்பம் அதிகமாக இருக்கிறது.
அதிகரிக்கும் வெப்பத்தினால் காற்று சூடாகி மேலே எழும்புகையில் அந்த வெற்றிடத்தை நிரப்ப பாயும் காற்று அனல்க் காற்றாகி இம்சிக்கின்றது. அட்லாண்டா போன்ற இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு இத்தகைய வெப்பக் காற்றே காரணமாகி விடுகிறது. நகர்ப்புறங்களில் வெப்பம் அதிகமாக இருப்பதற்கு நாம் கணிப்பது போலவே மரங்களின் குறைவும் ஒரு முக்கியமான காரணம். வெப்பத்தை உள்ளிழுத்து அதை ஆவியாகாமல் தடுக்கும் மரங்களும், நிலப்பரப்பும் குறைவாக இருப்பது வெப்ப அதிகரிப்புக்குக் காரணமாய் இருக்கிறது.
நகர்ப்புறங்களில் வெப்பத்தைக் குறைப்பதற்காக மரம் நடுவதைப் போல, வெப்பத்தை கிரகித்துக் கொள்ளாமல் எதிரொளிக்கும் பொருட்களைக் கொண்டு வீட்டுக் கூரைகள் அமைப்பதை மேல் நாட்டின் வெப்பமான நகரங்களில் பரிந்துரை செய்திருக்கிறார்கள். இதன் மூலம் நகரின் வெப்பம் குறையும் என்பது அவர்களின் கணிப்பு.
இதனிடையே வெப்ப காலங்களில் ஃபுட் பாய்சனிங் எனப்படும் உணவு உட்கொள்வதனால் வரும் நோய்கள் மிகவும் அதிகரித்து விடுகின்றன. அதற்கு ஒரு காரணம் பாக்டீரியாக்கள் வெப்ப காலத்தில் வேகமாக வளர்வது. அதுவும் ஈரத்தன்மையுள்ள, வெப்ப நாட்கள் பாக்டீரியாவை மிகவும் வேகமாகப் பரப்புகின்றன. இதனால் உணவுப் பொருட்களில் தொற்றிக் கொள்ளும் பாக்டீரியாக்கள் வெப்பத்தால் சட்டென்று பல மடங்கு பரவி நமது உணவைக் கெடுத்து, அதை உண்ணும் நம்மையும் படுக்க வைத்து விடுகிறது.
பழைய உணவையும், புதிய உணவையும் சேர்த்து வைப்பதும் பாக்டீரியாப் பரவலுக்கு காரணமாகிவிடக் கூடும். சமையலுக்கு முன் சமையலுக்குப் பயன்படுத்தும் பாத்திரங்கள், கத்திகள், அனைத்தையும் மிகவும் சுத்தமாய் வைத்திருத்தல் அவசியம். மாமிச உணவுகளை உண்ணும் போது முழுமையாக சமைக்கப்பட்டிருக்கிறதா என்பதைக் கவனித்து உண்ண வேண்டும். சரியாக வேக வைக்கப்படாத உணவுப் பொருட்கள் பிரச்சனை தரும்.
வெயில் காலங்களில் ஏற்படும் நோய்களுக்கு இன்னொரு காரணம் இந்த காலங்களில் நமக்குத் தேவையான தண்ணீர் கிடைக்காமல் போவது. இதனால் சோர்வு, தலைவலி, எரிச்சல், மன உளைச்சல் போன்ற பல பிரச்சனைகள் நம்மை பிடிக்கின்றன. வெப்பத்தின் தாக்கம் அதிகமாய் இருக்கும்போது தவிர்க்க முடியாமல் வாங்கிக் குடிக்கும் சுகாதாரமற்ற சாலையோர பானக் கடைகள் நோயையும் சேர்த்தே விற்கின்றன. அவசரமாக நமது உடலின் வெப்பத்தையும், சோர்வையும் நிறுத்துகையில் நிதானமாய் நோயை உள்ளே அனுமதிக்கிறோம் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
வேனிற்காலத்தில் கைகளை மிகவும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். கைகளைக் கழுவாமல் எதையும் உண்ணக் கூடாது. எப்போதெல்லாம் முடியுமோ அப்போதெல்லாம் கைகளைச் சுத்தமான நீரில் கழுவிக் கொள்ள வேண்டும். வெளியே சுத்தமான தண்ணீர் கிடைக்காது என நினைத்தால் முன்னமே தண்ணீரை எடுத்துச் செல்வது அவசியம்.
உணவுகளை உண்ணும்போதும் சரியான வெப்ப நிலையிலேயே உண்பதும் நோயைத் தவிர்க்க உதவும். பதப்படுத்தப்படாத உணவுகளை வெகுநேரம் கழித்து உண்பதைத் தவிர்த்தல் பலனளிக்கும். மருத்துவ அறிக்கைகளின் படி வெயில்காலங்களில் மிச்சமாகும் உணவு இரண்டு மணி நேரம் குளிர்சாதனப் பெட்டிக்கு வெளியே இருந்தாலே அது கெட்டு விடும். எனவே பழைய உணவுகளை உண்கையில் கவனம் தேவை.
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
Special Category
»
மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty
»
~ கோடை வெப்பத்தைச் சமாளிக்க கொஞ்சம் டிப்ஸ் ~