பசி
ஒரு சோற்றுப் பருக்கை கூட
கிடைக்காமல்
பட்டினியால் செத்தவனுக்கு
பிடிப்பிடியாய் வாய்க்கரிசி
வாய்க்கும் வயிற்றுக்கும்
இடைவெளி
சுமார் ஒன்றரை அடி தூரம்
இருபத்தோரு நூற்றாண்டுகளாய்
செயற்கை கோளில் பயணம் செய்தும்
போய்சேர முடியவில்லை
பசிக்கு ருசியேது
அவனுக்கு பசித்தது
மண்ணைத் தின்றான்
மண்ணுக்குப் பசித்தது
அவனை தின்றது
பசிக்கு ருசியேது!!!
இந்த
"பசி"பிக் பெருங்கடலில்
நீந்தத் தெரிந்தவர்களும்
மூழ்கித்தான் போகிறார்கள்