நானோ உன்னை மட்டுமே - என்
மனதில் பூத்த பூவாக நினைத்து
நேசித்தேன் - ஆனால்
நீயோ தோட்டத்தில் மலரும்
பலவகை பூக்களில் ஒன்றாக
என்னையும் நினைத்து விட்டாயே ...
என் வாழ்வுக்கு தேவை
அழகிய ஆண்மகன் இல்லை...
என் வாழ்வை அழகானதாக்கும்
அன்பானவன் மட்டுமே.....
இதோ பார் உண்மையாய் என்னை
நேசிக்கும் உறவுக்காரன்
கிடைத்து விட்டான்...
உன்னை நம்பி ஏமாந்த
மனக்காயத்துக்கு மருந்தானவன்..
உண்மை நேசத்தை தேடும் என்
மனதுக்கு அன்பு விருந்தானவன்...
எனக்கு முன் தெரியும் பிரகாசமான
வாழ்வை நோக்கி
அவன் கரம் பற்றி நடந்து போகிறேன்!
கபடதாரி உந்தன் போலி அன்பை
கடந்து போகிறேன்!!